234

என்றது, தம்மில் விளையாடுவதற் குத்திரண்ட பூதமென்றவாறு.

236-7. சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் குழுமு நிலை 1போரின் முழு முதல் தொலைச்சி-சிலந்தியினது வெள்ளிய நூல்சூழ்ந்த பக்கத்தினை உடைய பலவாகத் திரண்ட தன்மையினை உடைய போர்களினுடைய பெரிய அடியை வாங்கி விரித்து,

238. பகடு ஊர்பு இழிந்த பின்றை-ஏர்கள் கடாவிட்டுப் போன பின்பு,

238-9. துகள் தப வையும் துரும்பும் நீக்கி-குற்றம் அறும்படி வைக்கோலையும் கூளத்தையும் அதனிடத்துநின்று நீக்கி,

239.பைதுஅற-2ஈரம் உலராநிற்க,

240. குடகாற்று எறிந்த குப்பை-மேற்காற்றாலே கையாலே தூவித் தூற்றின பொலி,

240-41. வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்-வடதிசைக்கண் உளதாகிய மேருவாகிய மலைபோல மிகும்படி தோன்றும்,

242. தண் பணை தழீஇய தளரா இருக்கை-மருதநிலம்சூழ்ந்த அசையாத குடியிருப்புகளில்,

மார்பினையும் (221) தோலினையு முடைய(222) வினைஞர் சிறார்(223)முனைஇ (224)அவலெறியுலக்கைப்பாடுவிறக்கையாலே (226) கிள்ளை வெரூஉம் (227) கழனிகளில் (228) விளைந்த நெல்லினைத்(230) துமித்த வினைஞர் (231) ஏற்றித் (233) தொலைச்சி(237) நீக்கி (239) எறிந்த குப்பை (240) தோன்றும் இருக்கை எனக் கூட்டுக.

243-4. பகடு ஆ ஈன்ற கொடு 3நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்-பெருமையை உடைய பசுக்கள் ஈன்ற வளைந்த அடியை உடைய கன்றுகளைக் கட்டின 4தாமணியை உடைய நெடிய உதாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,

5"முழுவலி துஞ்சும் நோய்தபு நோன்றொடை , நுண்கொடி யுழிஞை வெல்போரறுகை" என்றார் பிறரும். கவை: ஆகுபெயர்.

245. [ஏணி யெய்தா நீணெடுமார்பின்;] நீள் ஏணி எய்தா நெடு மார்பின்-நீண்ட ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும்,

246. முகடு துமித்து அடுக்கிய பழ பல் உணவின்-தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையு உடைய,


1 பி-ம்.‘போர்பின்'

2 "பைதுஅற-பசுமையறும்படி "(பெரும்பாண்.230. ந,)

3 நடை-அடி: "நடைநாலும்" (தக்க.716.)

4 பெரும்பாண். 152, உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.

5 பதிற். 44 : 9 - 10.