236

மேகங்கள் விளையாடித் திரியும் மூங்கில்வளர்கின்ற பக்கமலையிலே தம்மை வருத்து தலை உடைய 1யாளிபாய் கையினாலே திரட்சி அமைந்த யானை பலவும் கூடிக் கலங்கிக் கூப்பிட்டாற்போல,

260-61. எந்திரம் சிலைக்கும்துஞ்சா கம்பலை விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்-ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையை உடைய கருப்பஞ்சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்கள்தெடாறும்,

ஆலை: ஆகுபெயர்.

262. கரும்பின் தீ சாறுவிரும்பினிர் மிசைமின்-கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் அக்கரும்பின்கட்டியைத் தின்பீராக;

2"மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி", 3"வீழ்களிறு மிசையாப் புலியினும்" என மிசைதல் தின்றற்றொழில்மேநின்றது.

263-5. [வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத், தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த, குறியிறைக் குரம்பை:] வெள் கோடு விரைஇ வேழம் நிரைத்து தாழை முடித்து தருப்பை வேய்ந்த குறியிறை குரம்பை-வஞ்சிமரமும் காஞ்சிமரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றி வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழைநாராற் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறியஇறப்பை உடைய குடிலினையும்,

முடிதந்து முடித்தென விகாரம். குறியிறை பண்புத்தொகையாதலின், 4மருவின்பாத்திதாய் நின்றது.

265. பறி உடைமுன்றில்-மீனை வாரியெடுக்கும் பறிகளை உடையமுற்றத்தினையு உடைய,

266-7. கொடு கால் புன்னை கோடுதுமித்து இயற்றிய பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - வளைந்த காலை உடைய புன்னைகளுடைய கொம்புகளை வெட்டியிட்ட பசிய காய்கள் நாலும் பரந்த மணலை உடைய பந்தரிலே,

பைங்காய்-சுரைக்காய் முதலியன; புன்னங்காயுமாம்.

268. இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி-இளையவர்களும் முதிர்ந்தவர்களும் சுற்றத்துடனே நிறைந்திருந்து பின்பு,

269-71. புலவு நுனை பகழியும் சிலையும்மான செ வரி கயலொடு பசு இறா பிறழும் மை இரு குட்டத்து மகவொடு வழங்கி -புலால்நாறு முனையுனை உடைய அம்பையும் வில்லையும் ஒப்பச் சிவந்தவரியினை


1 யாளி-இங்கே அத்தியாளி.

2 கலித்தொகை,50:2.

3 அகநானுறு, 29:3.

4 தொல். குற்றியலுகரப். சூ.77.