உடைய கயல்களோடே பசிய இறாப் பிறழும் கருமையை உடைய பெரிய ஆழ்ந்த குளங்களைப் பிள்ளைகளோடே உலாவி மீனைப் பிடித்து, 272-3. கோடை நீடினும் குறைபடல் அறியா தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்-கோடைக் காலம்நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழ்ந்தும் குளங்களினுடைய கரையைக்காத்திருக்கும், "வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற், களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி, யளித்தவை பாடி யாட"(சீவக, 804.) என்றார் பிறரும். 274. கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்-வளைந்த முடியுனை உடைய வலையை வீசுவாருடைய குடியிருப்பிலே தங்குவீராயின், பந்தரிலே (267) துவன்றி(268)வழங்கிக் (271) காத்திருக்கும் (273) வலைர் என முடிக்க. குரம்பையினையும், முன்றிலினையும்(265) உடைய குடி (274) என்க. 275. அவையா அரிசி அம் களி துழவை-குற்றாத கொழியலரிசியை அழகினை உடைய களியாகத் துழாவி அட்ட கூழை, 276. மலர்வாய் பிழாவில் புலர ஆற்றி-அகன்ற வாயை உடைய தட்டுப் பிழாவிலே உலர ஆற்றி, 277-8. பாம்பு உரை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூ புறம் நல் அடை அளைஇ-பாம்பு கிடக்கின்ற புற்றின்கண்கிடக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும் பொலிவுபெற்ற புறத்தினை உடைய நல்ல முளையை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து, நெல்லடையும் பாடம். 278-9. [தேம்பட, எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி:] தேம்பட இரு எல்லையும் இரு இரவும் முறை கழிப்பி - இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து, 280-81. [வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த, வெந்நீ ரரியல் விரலலை நறும்பிழி:] வல் வாய் சாடியின் வழைச்சு அறவிளைந்த-வலிய வாயினை உடைய சாடியின் கண்ணே இளமை அறும்படி முற்றின, விரல் அலை அரியல் வெ நீர் நறுபிழி-விரலாலே அலைத்து அரிக்குந் தன்மையை உடைத்தாகிய வெவ்விய நீர்மையை உடைய நறிய கள்ளை, 282. தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - மிகவும் உலராத மீனைச் சுட்டதனோடே இளைத்த அளவிலே பெறுகுவிர்; ஆற்றி (276) அளைஇக் (278) கழிப்பி(279) விளைந்த (280) பிழி (281) என்க.
|