240

மோர் வெண்ணெயின் உருப்பு உறு போழொடு-1கொம்மட்டிமாதுளையினுடைய பசியகாய் மிளகு பொடிகலக்கப்பட்டுக் கருவேம்பினது நறிய இலை அளாவப்பட்டுச்சிவந்த பசுவினது நறியமோரின் கண் எடுத்தவெண்ணெயின்கண்ணேகிடந்து வேகலின் வெம்மையுறுகின்ற வகிரோடே,

308-10. [பைந்துணர், நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த தகை மாண் காடியின் :]நெடுமரம் கொக்கின் பைந்துணர் நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின் -நெடிய மரமாகிய மாவினது பசிய கொத்திடத்து நறிய வடுவினைப் பலவாகப்போகட்ட அழகுமாட்சிமைப் பட்ட ஊறுகறியோடே,

310. வகைபட பெறுகுவிர்-சோற்றின்கூறுகளுண்டாகப் பெறுகுவிர்;

சேப்பின் (301) மகடூஉ (304)வத்தத்தானுண்டான அரிசியை (305) அட்டனவற்றைக் (304)சுடர்க்கடையிலே (305) போழோடே (307) காடியோடே பெறுகுவிரென்க.

311-2. வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை -விளையாட்டினையுடைய திரள்களோடே நீருண்ணுந் துறையிலேகூடி நீராடுகின்றமகளிர் போகட்டுப்போன பொன்னாற்செய்த மகரக்குழையினை,

313. இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென- இரையைத்தேடுகின்ற நீலமணிபோலும் சிச்சிலி தனக்கு இரையாகத்துணிந்தெடுத்ததாக,

314. புள் ஆர் பெண்ணை புலம்பு மடல், செல்லாது-பறவைகள் நிறைந்திருக்கின்ற பனையில் தனித்தமடலிற்போகாமல்,

315-6. கேள்வி அந்தணர் அரு கடன் இறுத்த வேள்வி தூணத்து அசைஇ-நூற்கேள்வியையுடைய அந்தணர் அரு கடன் இறுத்த வேள்வி தூணத்து அசைஇ-நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த யாகசாலையிடத்து நட்டயூபத்தின்மேலேயிருந்து,

316-7. [யவன, ரோதிம விளக்கினுயர்மிசைக் கொண்ட:] யவனர் உயர்மிசை கொண்ட ஓதிமவிளக்கின்-சோனகர் கூம்பின்மேலிட்ட அன்னவிளக்குப்போல,

ஈண்டுக் 2காரன்னமென்றுணர்க.


1 "மாதுளங்காய்-கொம்மட்டிமாதுளங்காய்; புளித்தகறி ஆக்குதற்குக் கொம்மட்டி மாதுளங்காய் சிறக்கும்" சிலப். 16 : 52. அரும்பத.

2 "காரன்ன முண்மையின், வெள்ளையன்னம் இனஞ் சுட்டிய பண்பு" (சீவக. 930. ந.)என்பதனாலும், "பள்ள நீர்குடைந் தஞ்சிறைப் பாசிபோர்த் தெழுந்த, வெள்ளை யன்னத்தைக் காரன மெனப் பெடை வீழ்ந்த, உள்ள மீட்டலமர" (திருவிளை. நகரச்.12) என்பதனாலும்,