244

349. இரவில் மாட்டிய இலங்கு சுடர்-இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு.

349-51. [ஞெகிழி, யுரவுநீ ரழுவத் தோடு1கலங்கரையும், துறை:] உரவு நீர் அழுவத்து ஞெகிழி ஓடும் கலம் கரையும் துறை-உலாவுகின்ற கடற்பரப்பிலேவந்து நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறொரு துறைக்கண் ஓடுங்கலங்களை இது நம் துறையென்று அழைக்குந் துறை,

இனி, ஞெகிழியைக் கடைக்கொள்ளியாக்கி அதனை எரித்துக் கொளுத்தின இலங்குசுடரென்றுமுரைப்பர்.

351: பிறக்கு ஒழிய போகி-பின்னே கிடக்கப்போய்,

351-3. [கறையடிக், குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும், வண்டோட்டுத் தெங்கின் :]

குன்று உறழ் கறை அடி யானை மருங்குல் ஏய்க்கும் தெங்கும்-மலையோடு மாறுபடுகின்ற உரல்போன்ற அடியினையுடைய யானையின் உடம்பையொக்கும் சருச்சரையையுடைத்தாகிய தெங்கினுடைய,

353. [வாடுமடல் வேய்ந்த :]

வள் தோட்டு (353) வாடு மடல்வேய்ந்த-வளவிய 2இலையினையுடைய உலர்ந்த 3பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (355) யென்க.

354. மஞ்சள் முன்றில்-மஞ்சளையுடைய முற்றத்தினையும்,

மணம் நாறு படப்பை - மணம்நாறுகின்ற பூந்தோட்டங்களையுமுடைய,

355. தண்டலை உழவர் தனி மனை சேப்பின் - தோப்புக்குடிகளுடைய ஒப்பில்லாத மனைகளிலே தங்கின்,

356. [தாழ்கோட் பலவின்சூழ்சுளைப் பெரும்பழம் :]

தாழ் கோள் பலவின் பழம்-தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது பழம்,

சூழ் சுளை பெரு பழம்-தின்பார் விரும்பிச்சூழும் சுளையையுடைய பெரிய பழத்தையும்,

357. 4வீழ் இல் தாழை குழவி தீ நீர்-விழுதில்லாத தாழையாகிய தெங்கின் இளைதாய இனிய நீரையும்,


1 கலங்கரைவிளக்கமென்னும்பெயர் ஈண்டு அறியற்பாலது.

2 தென்னையின் மட்டையையும் இலையென்று ஆன்றோர் வழங்குவர்;

"இலையார் தெங்கிற் குலையார் வாழையின், பாளைக் கமுகின் பழம் வீழ்சோலைப் பழன நகராரே"(தே. திருஞா.)

3 பழுத்தல்-பழுப்பு; கீறி இதனால்முடையப்பட்டது கீற்று.

4 வீழில் தாழையென்பது தென்னைக்குவெளிப்படை; மற்றொன்று"வீழ்த்தாட்டாழை" (நற் .78:4.) "வீழ்தாழ் தாழை யூழுறு கொழு