குங் கமுகினுடைய சூற்கொண்ட வயிற்றையொத்த 1பச்சைக்குப்பிகளை உண்டு போக்கி(பி-ம்.) நேராக்கி). 382-3. நாளும் பெரு மகிழ் இருக்கை மரீஇ - நாடோறும் பெரிய மகிழ்ச்சியையுடைய இருப்பை மருவி, 383-4. சிறு கோடு குழவி திங்கள் கோள் நேர்ந்தாங்கு-சிறிய கோட்டையுடைய 2இளைதாகிய பிறையைச் செம்பாம்பு தீண்டினாற்போல, இஃது 3இல்பொருளுவமை. 385. சுறவுவாய் அமைத்த சுரும் புசூழ் சுடர் நுதல்-மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள்சூழும் ஒளியையுடைய நுதலினையும், 386. 4நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழை கண்-கள்ளினை உண்டுபொருந்திய நன்றாகிய அழகினையுடைய குளிர்ச்சியையுடைத்தாகிய கண்ணையுமுடைய, வள்ளத்தினறவைத் தம்முள்ளே ஆக்கினமையிற் பெயர்த்தென்றார். 387. 5மடவரல் மகளிரொடு பகல் விளையாடி-மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடே பகற்பொழுது விளையாடி,
1 பச்சைக் குப்பிகளிலிருந்த கள்ளை உண்டார்களென்பது கருத்து. கள்ளைக் குப்பியிலே இட்டுவைத்தல், "கள்ளி னிரும்பைக் கலஞ்செலவுண்டு" (மதுரைக்.228) என்பதனாலும், ‘கள்ளினையுடையவாகிய பெருமையினையுடைய குப்பிகள் வற்றும்படியாகக் கள்ளினையுண்டு' என்னும் அதன் உரையாலும் உணரப்படும். 2 இளைதாகிய-இளையதாகிய ;"இளைதாக முண்மரங் கொல்க' (குறள், 879) 3 பிறையைப் பாம்பு தீண்டுதலின்மையின் இங்கே இல்பொருளுவமை யாயிற்று; "இளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா, தணங்கருந் துப்பி னரா" (நாலடி, 241) என்பது இதனை வலியுறுத்தும். 4 நறவம்பூவினிதழை மகளிர்கண்ணுக்கு உவமை கூறுதலும் பண்டைவழக்கமாதலால், நறவுப்பெயர்த்தமைத்த வென்பதற்கு நறவம் பூவினிதழைப் பெயர்த்தமைத்தாற்போன்ற வென்று பொருள் கொள்ளுதலுமாம்; "பேர்மகிழ் செய்யும் பெருநறாப் பேணியவே, கூர்நறா வார்ந்தவள் கண்"."நயவரு நறவிதழ் மதருண்கண்" (பரி, 7:63-4. 8:75), "நறவின், சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலிர்கொளீரிமை" (அகநா. 19:9-11) என்பவையும் இதனை வலியுறுத்தும். 5 "மடவரல் வள்ளியொடு" (முருகு. 102) ; ‘மடவரல்-மடப்பம்' (புறநா. 89;2, உரை)
|