388-9. பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூமலி பெரு துறை-பெறுதற்கரிய பழமையுடைத்தாகிய புகழினையுடைய துறக்கத்தை யொக்கும்தப்பாமல் நீர்வருமுறைமையினையுடைய பூ மிகுகின்ற பெரியதுறையிடத்தே, துறை, நுகர்பொருள்குறைவின்மையின், துறக்கமேய்க்குமென்றார். 390. செவ்வி கொள்பவரோடு அசைஇ - இளவேனிற்செவ்வியை நுகர்வாரோடு இளைப்பாறி, 390-91. அவ்வயின் அரு திறல் கடவுள் வாழ்த்தி-அத் 1திருவெஃகாவணையில் அரியதிறலினையுடைய திருமாலை வாழ்த்தி, 391-2. [சிறிதுநுங், கருங்கோட்டின்னிய மியக்கினிர் கழிமின்:] நும் கரு கோடு இன் இயம் சிறிது இயக்கினிர் கழிமின்-நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழைச் சிறிது வாசித்து அவ்விடத்துநின்றும் போமின் ; ஆங்கட் (373) பொதும்பர்க் (374) குருகின்பூ (376) உறைப்பக் (379) கழீஇய ஒளபாழிறொறும் (380) மகளிரோடே பகல்விளையாடிப் (387) பெருந்துறைச் (339) செவ்விகொள்பவரோடசைஇ (390) நீலப்பைங்குடந் தொலைச்சி (382) மரீஇக் (383) கடவுள்வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமினென முடிக்க. 393-6. [காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ, நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம், கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற் களிறுகத னடக்கிய வெளிறில்கந்தின் :] 2வெளிறு இல் கந்தின் கதன் அடங்கிய களிறு கீழ நெடு கையானை.......களுந்தின்கின்ற, நெய் மிதி கவளம்-நெய்யை வார்த்து மிதித்த கவளங்களை, 3கடு சூழ் மந்திகாழோர் இகழ் பதம் நோக்கி கவரும் காவின் -
1 இது, பிரமதேவர் செய்த வேள்வியை அழிக்கவந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளிகொண்டு அணைபோன்றுகிடந்த தலம் ; இங்கே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாஸேது என்பது திருநாமம். இது தமிழில் திருவெஃகாவணையென வந்ததென்பர் ; இது திருவெஃகணை யெனவும் வழங்கும்; "வெஃகணைக் கிடந்ததென்ன நீர்மையே" (திவ். திருச்சந்த. 63) 2 இந்தப் பாகத்துக்கு எந்தப்பிரதிகளிலும் உரைகிடைத்திலது ; வயிரமுள்ள கந்தினாற் கோபத்தையடக்கிய ஆண்யானைகளும், கீழே தாழ்ந்த நெடிய கைகளையுடைய பெண்யானைகளுந்தின்கின்றவென்க. 3சிறுபாண். 158 உரையையும் குறிப்புரையையும் பார்க்க.
|