1 - திருமுருகாற்றுப்படை | குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி | 230 | முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் | 235 | சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி | 240 | யிமிழிசை யருவியொ டின்னியங் கறங்க வுருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண் முருகிய நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக |
229. "குடந்தம் பட்டுச் சூழ்போந்து குழைந்து வழுத்தி " (கூர்ம. தக்கன்வேள்வி. 52) 232. "குருதிச் செந்தினை பரப்பி" (முருகு. 242) 232-3. "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண். 143); "விடையும் வீழ்மின்" (புறநா. 262 : 1) 234. "பொய்வல்பெண்டிர் பிரப்புளர் பிரீஇ" "அறிதல் வேண்டு மெனப் பல்பிரப் பிரீஇ" அகநா. 98 : 9, 242 : 9) "பரந்தெலாப் பிரப்பும் வைத்து" (சீவக. 369); "அவ்வகற் கொண்ட வவியும் பிரப்பும்" (பெருங். 1. 34 : 186) 233-4. "சில்பலி யரிசியும்" (மணி. 6 : 95) 232-4. "பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய்" (அகநா. 22 : 9-10); "கொழுவிடைக்கறை விராவிய பலிக்குறை நிரப்பி, வழுவில் பல்பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத்து" (தணிகை. நாடு. 46) 239. நறும்புகை யெடுத்து: "நறையி னறும்புகை நனியமர்ந்தோயே" (பரி. 14 : 20). மு. "குறிஞ்சிபாடுமி னறும்புகை யெடுமின்" (சிலப். குன்றக்.); "ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி" (பு. வெ. 79)
|