251

405. 1சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்-செங்கலாற்செய்யப்பட்டு உயர்ந்த புறப்படைவீட்டைச்சூழ்ந்த மதிலினையும்,

406-7. [இழுமென் புள்ளினீண்டுகிளைத் தொழுதிக், கொழு மென் சினைய கோளியுள்ளும் :] கொழு மெல் சினைய இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி கோளியுள்ளும்-கொழுவிய மெல்லிய கொம்புகளிடத்தனவாகிய இழுமென்னும் ஓசையையுடைய புறவினுடைய திரளுகின்ற சுற்றத்திரட்சியையுடைய பூவாமற்காய்க்கும் மரங்களில் விசேடித்தும்,

408. பழம் மீ கூறும் பலா போல-பழத்தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலாமரத்தையொக்க,

409-10. புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால்நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த 2ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,

410-11. 3பலர் தொழு விழவுமேம்பட்ட பழ விறல் மூதூர் - பலசமயத்தாரும் தொழும்படி எடுத்த விழாக்களாலே ஏனைநகர்களின் மேலான வெற்றியினையுடைய பழைய ஊராகிய,

412-3. 4 அவாய் வளர் பிறை சூடி செவானத்து அந்தி வாய் ஆடும் மழை கடுப்ப-அழகிய இடத்தையுடைய வளரும்பிறையைத் தன் மேலே சூடிச் செக்கர்வானமாகிய அந்திக்காலத்தே உலாவுகின்ற மேகத்தையொப்ப,

கொம்பும் யானையும் குருதியும் உவமிக்கப்படும்பொருள்.

414-7. [வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப, வீரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப், பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே, ராராச் செருவி னைவர் போல :]

வெள் கோடு இரு பிணம் குருதி ஈர்ப்ப (414) பொருது (416)-வெள்ளிய கொம்புனையுடைய கரிய யானைப்பிணத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துக்கொண்டு போம்படி பொருது,

ஈரைம்பதின்மரும் களத்து அவிய (415) பெரு அமர் கடந்த (416) ஐவர் போல (417)-துரியோதனன் முதலிய நூற்றுவரும் களத்திலேபடும்படி பெரிய போரைவென்ற தருமன் முதலியோரைப்போல,


1 "சுடுமண்-ஓடு" (சிலப். 14:146, அடியார்,

2 "வான்கவிந்த வையகமெல்லாம்" (நாலடி.பொறை.10)

3 "பலர் புகழ்-எல்லாச்சமயத்தாரும் புகழும்" (முருகு. 2.ந.)

பல சமயத்தெய்வங்களுக்கும் காஞ்சி இடமாக இருத்தலின், பலரென்பதற்குப் பல சமயத்தாரென்று பொருள் செய்தனர்; "பரமசிவன் சத்தி குமரன்மால் புறத்தோர் பலரும்வீற்றிருப்பதப் பதியே" (கந்த. நகர. 90)

4 அ-அழகு: "அவ்விதழ்-அழகிய இதழ்" (நெடுநல். 41. ந.) "அச்சோலை-அழகிய சோலை" (தக்க. 65, உரை)