1கொடுஞ்சி நெடு தேர் (416) ஆரா செருவின் ஐவர் (417)-முன்னே தாமரைமுகையினையுடைய நெடியதேரினையும் தொலையாத போரினையுமுடைய ஐவர், 418. அடங்கா தானையோடு உடன்று மேல் வந்த- ஓரெண்ணின் கண் அடங்காத படையுடனே கோவித்துத் தன்மேல்வந்த, 419. ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து-தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே வெற்றிக்களிப்புத்தோன்ற ஆரவாரித்து, 420-21. [கச்சி யோனே கைவண் டோன்ற, னச்சிச் சென்றோர்க்கேம மாகிய :] கைவள் தோன்றல் நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய கச்சியோனே - கைவளப்பத்தையுடைய தலைவன், தன்பரிசிலைவிரும்பித் தன்பாற் சென்றோர்க்குப் பாதுகாவலாகிய காஞ்சீபுரத்தே யிருக்கின்றோன் ; படப்பையினையும் (401) காவினையும் (395) வரைப்பினையும் (405) அடையாவாயிலினையும் (401) தெருவினையும் (397) கடையினையும் (399) படையினையு (398) முடைய மூதூர் (411) என்க ; காண்வரத்தோன்றிப் (404) பலாஅப்போல (408) விழவுமேம் பட்ட மூதூர் (411)என்க. கைவண்டோன்றல் (420) ஐவர்போலக்(417) குருதியீர்ப்பப் (414) பொருது (415) ஆர்த்து (419)ஏமமாகிய (421) மூதூராகிய (411)கச்சியிடத்தேயிருக்கின்றோன் (420) என்க. 422-3. [அளியுந் தெறலு மெளிய வாகலின், மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட :] மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட தெறலும்-2தன்னுடனே
1 "கொடுஞ்சி- தாமரைப்பூவாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது" (மதுரைக். 751-2. ந,); "நெடுந்தேர்க் கொடுஞ்சி பற்றி நின்றோன்" (அகநா. 110:24-5), "நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்" (புறநா. 77:5). "மணித்தேர்க் கொடுஞ்சிகையாற் பற்றி" (மணி. 4:48) என்பவற்றாற் கொடுஞ்சி யென்பது தேரூர்பவர்கள் கையாற் பற்றிக் கொள்ளப்படுவதென்று தெரிகிறது. 2 "செய்யார் தேஎந் தெருமரம் கலிப்ப" (பொருந. 134); "சிலைத்தா ரகலமலைக்குந ருளரெனிற், றாமலி குவர்தமக் குறுதியாமவ, னெழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர், வாழக் கண்டன்று மிலமே" (புறநா. 61: 14-7) "செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக், கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ" (பு. வெ. 42)
|