பொருதார் தேயத்திலூர்களின் மன்றுகள் மக்களில்லையாய்ப் பாழாம்படி அழித்தலும், 422. எளிய ஆகலின்-தனக்கு எளியவாய் நடக்கையினாலே, 424. [நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப :] நயந்தோர் தேஎம் நல்பொன் பூப்ப அளியும் (422)- 1தன்னை விரும்பியிருந்தோர் தேயம் திருமடந்தை பொலிவுவெற்றிருப்ப அளித்தலும், 425. நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்-மலையலாகாதென்று உறவு கொள்ளுதலைவேண்டி அவன்றாளைவிரும்பினவர்களும், 426. துப்பு கொளல் வேண்டி துணையிலோரும் -அவன் பகையைத்தெறும் வலியைத் தமக்குப்பெறவேண்டின வேறோர் உதவியில்லாதவர்களுமாய், 427. கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு-2மலையினின்றும் விழுகின்ற அருவி அம்மலையிலுள்ள பண்டங்களை வாங்கிக்கொண்டு கடலுக்குக் கொடுப்பதாகச் சென்றாற்போல, 428.பல்வேறு வகையின் பணிந்த மன்னர்-பலவாகிய வேறு பட்ட திறைகளின் கூறுபாட்டோடே சென்று வணங்கின அரசர், 429-31. [இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை, வெண்டிரை கிழித்த வினங்குசுடர் நெடுங்கோட்டுப், பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கை :] இமையவர் உறையும் சிமையம் செவரை (429) விளங்கு சுடர் நெடு கோடு (430)-தேவர்களிருக்கும் உச்சியையுடைய சிவந்த மேருவினது விளங்குகின்ற ஒளியையுடைய நெடியசிகரத்தினின்றும், பொன் கொழித்து இழிதரும்போக்கு அரு கங்கை (431)-பொன்னைக் கொழித்துக் குதிக்கும் மாக்கட்குக் 3கடத்தலரிதாகிய கங்கையாகிய ஆற்றிலே, வெள் திரை கிழித்த (430) கங்கை (431)-கடலிடத்து வெள்ளிய திரையைக் கிழித்துச்சென்ற கங்கை, 432. பெரு நீர் போகும் இரியல் மாக்கள்-பெரிய நீரைக்கடந்து போம் கெடுதலையுடைய மாக்கள்,
1 "திருந்தடி பொருந்த வல்லோர், வருந்தக் காண்ட லதனினுமிலமே" (புறநா.61 : 18-9) 2 "இனி மலையிற் பொருள்களை வாரிக்கொண்டு யாறு கடலை நோக்கிப் போனாற்போல அவ்விடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு வருகின்றே மென்றுமாம்" (மலைபடு. 51-2, ந.) என்று பின்னும் இவ்வாறே உவமையைவிளக்குதல் காண்க. 3 "ஆழ நெடுந்திரையாறு கடந்திவர் போவாரோ" (கம்ப. குகப். 15)என்று கங்கையைப்பற்றிக் கூறியது இங்கே கருதற்குரியது.
|