254

கெடுபட்டுப்போவார் ஒருவர்க்குமுன்னே ஒருவர் விரைந்துபோதலைக் கருதுவர்.

433. ஒரு மரம் பாணியில் தூங்கியாங்கு-விடுகின்ற தோணியா கையினாலே அது வருங்காலம் பார்த்திருந்து தூங்கினாற்போல,

434-5. தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து-கெடாத யானை முதலிய செல்வங்களோடே நெருங்கா நின்று திரண்டு காலம்பார்த்திருக்கும் வளவிய நகரின் முற்றத்தினையுடைய வியனகர் (440),

எளியவாகலின் (422) நயந்திசினோரும் (425) துணையிலோருமாய்ப் (426)பணிந்தமன்னர் (428) தூங்கியாங்குச் (433)செவ்விபார்க்கும் முற்றமென்க.

436-7. பெரு கை யானை கொடு தொடி படுக்கும் கரு கை கொல்லன்-பெரிய கையினையுடைய யானைக்கு வளைந்துகிடக்கும் பூணைச் சேர்க்கும் வலிய கையுனையுடைய கொல்லன்,

437-8. இரும்பு விசைத்து எறிந்த கூடம் திண் இசை வெரீஇ-இரும்பைக் கையை உரத்துக்கொட்டின கூடத்தெழுந்த திண்ணிய ஓசையை வெருவி,

438-40. [மாடத், திறையுறை புறவின் செங்காற் சேவ, லின்றுயிலிரியும் பொன்றுஞ்சுவியனகர் :]

மாடத்து புறவின் செ கால் சேவல் இன் துயில் இரியும் நகர்-மாடத்திடத்துப் புறவினுடைய சிவந்த காலையுடைய சேவல் இனிய துயிலை நீங்கும் நகர்,

இறை உறை நகர்-இறைவன் இருக்கும் நகர்,

பொன் துஞ்சு வியல் நகர்-திருத்தங்குகின்ற அகலத்தையுடைய கோயிற்கண்ணே இருந்தோன் (447),

441-2. குணகடல் வரைப்பில் 1முந்நீர் நாப்பண் பகல் செய்மண்டிலம் பாரித்தாங்கு-கீழ்க்கடலாகிய எல்லையிடத்து நிலத்தைப்


1 "முந்நீர் ................... பௌவம் - மூன்று நீர்மையையுடைய ............ கடல்" (மதுரைக்.75-6. ந.), "நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுமுடைமையின், முந்நீர்-ஆகுபெயர்" (சீவக. 5, .) என்று நச்சினார்க்கினியரும், "முந்நீர்-கடல்; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை யென்பார்க்கு அற்றன்று ; ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழிஊற்று நீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று ; முதிய நீரெனின், ‘நெடுங்கடலுந் தன்னீர்மைகுன்றும்' என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது ; முச்செய்கை