படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்றுதொழிலையுடைய நீர்க்குநடுவே 1பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கிரணங்களைப் பரப்பித் தோன்றினாற்போல, 443-50. [முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி, யுடைத்தெரிந் துணருமிருடீர் காட்சிக், கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத், துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப், பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான், கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப், புலவர் பூண்கடனாற்றி :] இடைதெரிந்து உணரும் இருள் தீர்காட்சி (445)-நடுவுநிலையை ஆராய்ந்தறியும் மயக்கந்தீர்ந்த அறிவாலே, 2முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் (443) வேண்டுப வேண்டுப அருளி(444)-முறைப்பாட்டை விரும்புவார்க்கும் காரியங்களை விரும்புவார்க்கும் அவரவர் விரும்புவனவற்றை விரும்புவனவற்றை அருளிச்செய்து, புலவர் பூண் கடன் ஆற்றி(450)-புலவர்க்குப் பேரணிகலங்களையும் கொடுத்தற்குரிய பிறகலங்களையுங் கொடுத்து, வேண்டினர்க்கு (444) கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து (446) உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி (447) - வேண்டிவந்த பரிசிலர்க்குக் கொடையாகிய கடனை முடித்த குவியாத நெஞ்சத்தோடே கொடுமையில்லாத3மந்திரச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி.
யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணையழித்தலும் மண்ணைக்காத்தலுமாம்" (சிலப். 17. உள்வரி, : 3 அடியார்.) எனப்பிறருமெழுதுதல் காண்க :"மும்முறை நீர்" (கம்ப. அதிகாயன். 21) என்பதும் இங்கே அறியத்தக்கது. "யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழை நீருமுடைமையால், கடற்கு முந்தீரென்று பெயராயிற்று ; அன்றி முன்னீரென்றோதி, நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப" (புறநா. 9 விசேட உரை ) என்பது ஒரு சாரார் கொள்கை. 1 "பகற்கதிர்-பகற்பொழுதைச் செய்யுங் கிரணங்கள்" (பொருந. 135. ந.) ; "பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு" (மதுரைக் .7) ; "காலைசூழ் செங்கதிர்: சூழல்-செய்தல்" (தக்க.279, உரை) ; சூரியனுக்குப் பகலைச் செய்வோனென்னும் பொருள்படும் திவாகரன் என்னும் பெயருண்மையையும் அறிக. 2 முறைவேண்டுநர்-வலியரால் நலிவெய்தினார் ; குறைவேண்டுநர்-வறுமையுற்றிரந்தார் ; 386-ஆம் திருக்குறளுரையைப் பார்க்க. 3 "மந்திரச் சுற்றத் தாரும்" (கம்ப. கும்ப. 5)
|