257

சென்று கடிய சூரனைக்கொன்ற பசிய பூணினையுடைய முருகனைப்பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும்,

459. துணங்கை அம் செல்விக்கு அணங்கு 1நொடித்தாங்கு-பேய்களாடுந் துணங்கைக்கூத்தினையும் அழகினையுமுடைய இறைவிக்குப் பேய்மகள் சில 2நொடி சொன்னாற்போல,

460-61. [தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி, வந்தேன் பெரும வாழிய நெடிதென :]

தண்டா ஈகை நின் பெரு பெயர் ஏத்தி வந்தேன் நெடிது வாழியஎன-அமையாக்கொடையினையுடைய நின் பெரிய பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்துவந்தேன், நெடுங்காலம் வாழ்வாயாகவெனச் சொல்லி.,

462. இடன் உடை பெரு யாழ் முறையுளி கழிப்பி-தனக்குக் கூறுகின்ற இலக்கணங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய யாழை வாசிக்குமுறைமையிலே வாசித்து,

முறையுளி : 3உளி :பகுதிப்பொருள்விகுதி.

463. கடன் அறி மரபின் கைதொழுஉ பழிச்சி-முற்படக் கண்டாக்காற் செய்யுங்கடனை அறிந்தமுறைமையோடே கையாற்றொழுது வாழ்த்தி,

அ நிலை-நீ நின்ற அந்த நிலைதன்னிலே,

465. நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க-நாவலாற்பெயர்பெற்ற அழகினையுடைய குளிர்ந்த உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி,

466. 4நில்லா உலகத்து நிலைமை தூக்கி-யாக்கையும் செல்வமும் முதலிய நிலையில்லாத உலகத்திடத்து நிலைபேறுடைய புகழை நாம்பெறுதல் நன்றென்று ஆராய்ந்து,

467. அ நிலை அணுகல் வேண்டி-முற்படிநின்ற சேய்நிலத்து நின்று தன்னை அணுகுதற்கு விரும்பியழைத்து,


1 நொடித்தாங்கு - நொடி சொன்னாற்போல" (கலித். 89:8, ,)

2 "புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்" (பெருங்.1, 33:72)

3 "பழுதுளி ; உளி : பகுதிப்பொருள் விகுதி' (மலைபடு. 153, ந,)

4 "மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்" (தஞ்சை. 21) ; "நிற்ப தேதுகொ னீடிசை யொன்றுமே நிற்கும்"(வி.பா. நச்சுப்.57); பொருநா.176, ந. குறிப்புரையைப்பார்க்க.