258

467-8. நின் அரை பாசி அன்ன சிதர்வை நீக்கி-நின்னுடைய அரையிற்கிடந்த கொட்டைப்பாசியின் வேரையொத்த சிதரின சீரையைப்போக்கி,

469-70. [ஆவி யன்ன வவிர்நூற் கலிங்க, மிரும்பே ரொக்கலொ டெருங்குடனுடீஇ :] ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் உடன் இருபெரு ஒக்கலொடு ஒருங்கு உடீஇ-1பாலாவியையொத்த விளங்குகின்ற நூலாற்செய்த துகில்களைப் படிசேரக் கரிய பெரிய சுற்றத்தாரோடே சேர உடுக்கப்பண்ணி,

471-2. கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை வல்லோன் அட்ட பல் ஊன் கொழு குறை-வளைந்த அரிவாளைக்கொண்ட வடுவழுந்தின வலியையுடைத்தாகிய கையினையுடைய மடையனாக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும்,

பலகாலும் அறுத்தலால், தழும்பிருந்த கையென்றார். கதுவுதல் கைக்கொள்ளுதல்.

473-4. அரி செத்து உணங்கிய பெரு செ நெல்லின் தெரி கொள் அரிசி திரள் நெடு புழுக்கல்-நிறத்தால் ஞாயிற்றையொத்து உலர்ந்த பெரிய செந்நெல்லினுடைய பொறுக்கிக்கொண்ட அரிசியலாக்கின திரண்ட 2இடைமுரியாத சோறும்,

அரிசெத்தென்றதற்கு உவமையின்றாகவென்றுமாம் : இனி அரிசெய்தென்று பாடமாயின் அரிதலைச் செய்தென்று கூறுக.

475. அரு கடி தீ சுவை அமுதொடு-பெறுதற்கரிய மிகுதியையுடைய இனிய சுவையினையுடைய கண்டசருக்கரை முதலியவற்றோடே, பிறவும்-கூறாதொழிந்தனவும்,

476. விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் - விருப்பமுடைத்தாகிய முறைமையினையுடைய தலையாப்புப் பரத்தலையுடைய அடிசிலை,

அமுதோடே (475) குறையும் (472) புழுக்கலும் (474) பிறவுமாகிய (475) அடிசிலைப் (476) பரப்பி (477) ஊட்டி (479) யென்க.

477-80. [மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி, மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந், தானா விருப்பிற் றானின் றூட்டி, மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும் :]

மங்குல் வானத்து மீன் பூத்தன்ன வால் கலம் திங்கள் ஏய்க்கும் வால் கலம் மகமுறை பரப்பி-திசைகளையுடைய ஆகாயத்திடத்தே உடுக்கள் தோன்றினாற்போன்ற சிறிய 3வெள்ளிக்கலங்களையும், திங்களை


1 "பாலாராவிப் பைந்துகில்" (சீவக.1094)

2 பொருந. 113-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

3 "மகிழ்தரன் மரபின் முட்டேயன்றியு, மமிழ்தன மரபி னூன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டல்" (புறநா. 390 : 16-8)