யொக்கும் பெரிய வெள்ளிக்கலங்களையும் நும்முடைய பிள்ளைகளுக்கு இடையே பரப்பி, எனவே தலைவராயினார்க்குப் பொற்கலம் பரப்புவரென்றார். தான் முகன் அமர்ந்து ஆனா விருப்பின் மகமுறை நோக்கி நின்று ஊட்டி-தான் முகம்பொருந்தி அமையாத ஆசையுடனே நும்முடைய பிள்ளைகளைப் பார்த்து நின்று உண்ணப்பண்ணுவித்து, 481-2. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இருபித்தை பொலிய சூட்டி-உலாவும் வண்டுகள் ஒலியாத நெருப்பிடத்தே கிடந்து விளங்கின பொற்றாமரையை நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி, பொற்றாமரை திங்களையொக்குமென்றல் பொருந்தாமையுணர்க. 483-4. உரவு கடல் முகந்த பருவ வானத்து பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு-பலவுஞ்சேர உலாவுகின்ற கடலிடத்தே முகந்த கூதிர்க்காலத்து மேகத்தினின்றும் பகற்காலத்தே பெய்தலையுடைத்தாகிய துளியின்கண்ணே மின் ஓடினாற்போல, 486-6.புனை இரு கதுப்பகம் பொலிய பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய - கைசெய்த கரியமயிரிடம் அழகுபெறும்படி, பொன்னாற்செய்து சேரக் கட்டுதமைந்த மாலையை விறல்பட ஆடு மகளிர் சூடாநிற்க, 487-9. [நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல், வளைகண்டன்ன வாலுளைப் புரவி, துணைபுணர் தோழில நால்குடன் பூட்டி :] நூலோர் புகழ்ந்த மாட்சிய துணை புணர் தொழில் மால் கடல் வளை கண்டன்ன வால் உளை புரவி நால்கு உடன் பூட்டி- 1 குதிரைநூல் கற்றோர் புகழ்ந்த அழகினையுடையவாய்த் தனித்துத் தொழில்செய்யாமல் இனங்களோடே கூடுந் தொழிலையுடையவாய்க் கருமையையுடைய கடலிற் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளிய கழுத்தின் மயிரையுடைய குதிரைகள் நான் கைச்சேரப்பூட்டி, நான்கு நால்கெனப் பெயர்த்திரிசொல். 490. அரி தேர் நல்கியும் அமையான்-பொன்னாற் செய்த தேரைத் தந்தும் கொடைமேல் விருப்பந்தவிரானாய், 490-92. செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து
1 குதிரையின் இலக்கணங்களைக் கூறும் சாலிகோத்திரம் என்று ஒரு நூலுண்டென்பது தக்கயாகப்பரணி, 665-ஆம் தாழிசையுரையாலறியப்படுகின்றது ; "உன்னய முதலாம் புரவிநூ லறிவோன்" (வி.பா. நாடுகரந்துறை. 21) என்பதனால் உன்னய மென்பதொருநூலுமுண்மை பெறப்படும்.
|