260

பொருதோருடைய போர்களை மாளப்பண்ணித் தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் முதுகிட்டவிடத்து விட்டுப்போன ஆகாயத்தே செல்கின்ற குதிரைகளுடனே பசிய பொன்னாற்செய்த பக்கரைகளையுந்தந்து,

493. [அன்றே விடுக்குமவன் பரிசில் :] அவன் அன்றே பரிசில் விடுக்கும்-அவன் நீ சென்ற அற்றைநாளே இவையொழிந்த பரிசில்களையுந்தருவான் ;

493-4. இன் சீர் கின்னரம் முரலும் அணங்குடை சாரல்-இனியதாளத்திலே கின்னரமென்னும் பறவைகள்பாடுந் தெய்வங்களையுடைய சாரலிடத்து,

495. மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்-மயில்களாரவாரிக்கும் மரம் நெருங்கின இளமரக்காட்டினையுமுடைய,

496. கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்-முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும்,

497. மந்தி சீக்கும் மாதுஞ்சும் முன்றில்-மந்திகள் அவ்விடத்துக் கிடந்த துராலை வாரும் மானும்புலியும் துயில்கொள்ளும் முற்றத்தே,

புறவினையும் (496) இறும்பினையும் (495) உடைய சாரலிடத்து (494) முன்றிலிலே (497) வேட்கு (499) மென்க.

498.செ தீ பேணிய முனிவர் - சிவந்த தீயைக் கவிடாமற்காத்துப் போந்த இருகடிகள்,

498-9. வெள் கோடு களிறு தரு விறகின் வேட்கும்-வெள்ளிய கொம்பினையுடைய களிறு முறித்துக்கொண்டுவந்த சமிதையாலே வேள்வியைச் செய்யும்,

மந்தி சீத்தலும், மாத் துஞ்சலும், களிறு விறகுதருதலும் இருடிகளாணையால் நிகழ்ந்தனவென்றுணர்க.

500. [ஒளிறிலங் கருவிய மலைகிழவோனே :]

ஒளிறு மலை-இவற்றால் விளங்குமலை ,

இலக்கு அருவிய மலை-விளங்குகின்ற அருவிகளையுடையமலை,

மலைகிழவோன்-இச்சிறந்த மலையையாளும் உரிமையையுடையோன்.

புலவுவாய்ப்பாண (22), பெருவளனெய்தி (26) முகந்துகொண்டு (27) யாம் அவனூரினின்றும் வருகின்றோம் ; நீயிரும் (28) திரையற்படர்குவிராயின் (37) நின்றுள்ளஞ்சிறக்க (45) ; நின்னவலங்கெடுக (38); இரவல (45), அவனிலைகேள் (38) : அவன்புலம் கொடியோரின்று (41) ; அதுவேயன்றி அப்புலத்தில் உருமுமுரறாது; அரவும் தப்பா (42) ; மாவும் உறுகண்செய்யா ; ஆகலின், ஆங்கு (43) அசைவுழி அசைஇத்