ஐந்தாவது
முல்லைப்பாட்டு | நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு | 5 | கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை யருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை | 10 | யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது |
1. "நனந்தலை யுலகம்" (பதிற். 63 : 18) ‘நன' என்னும் அகர வீற்றுரிச்சொல், அகலமென்னுங் குறிப்புப் பொருளை யுணர்த்துதற்கும் உரிச்சொல் எழுத்துத் திரிந்திசைத்தற்கும் இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. 78, ந ; இ - வி. சூ. 282, 289. 2 - 3. "கயந்தரு நறும்புனல் கையிற் றீண்டலும், பயந்தவர் களுமிகழ் குறளன் பார்த்தெதிர், வியந்தவர் வெருக்கொள விசும்பினோங்கினான், உயர்ந்தவர்க் குதவிய வுதவி யொப்பவே" (கம்ப. வேள்வி. 35) ; "நீர்விரி கமலச் செங்கை நீர்செல நிவந்த மாயோன்" (பாகவதம், 8. வாமனாவதார. 64) 4. "வலனேர்பு" (முல்லை. 91 ; முருகு. 1) 4 - 6. "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென " (நெடுநல். 1 - 2) 7. மு. "வாள்போழ்" (நாற். சூ. 147, உரை, மேற்.) என்னுஞ் செய்யுளிலும் ஓரடி இப்படி வந்துள்ளது. 3. யாழிசைவண்டு : "யாழ்வண்டு" (பொருந. 211) ; "வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடு" (கலித். 32 : 9) ; "வண்டியாழாக" (அகநா. 82 : 6) ; "உண்டிருந்த தேனை யறுபதங்க ளூடிப் போய்ப், பண்டிருந்த யாழ்முரல" (ஈங்கோய். எழு. 10); பொருந. 213, ந. குறிப்புரையையும் பார்க்க.8 - 10. "நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது" (நெடுநல். 43) ; "அரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்" (சிலப். 9 ;1-2)
|