| நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட | 50 | நெடுநா வொண்மணி நிழத்திய நடுநா ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர் சிதர்வர லசைவலிக் கசைவந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப் | 55 | பொழுதளந் தறியும் பொய்யா மாக்க டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப |
48. "சொரிசுரை கவரு நெய்வழி புராலில்" (பதிற். 47: 5) 49. (பி-ம்.) ‘மாட்டி' 50. (பி-ம்.) ‘நெடுநாவெண்மணி', ‘மிழற்றிய நடுநாள்', ‘நிழத்தலினடுநாள்',‘நிழற்றிய' "நெடுநா வொண்மணி கடிமனை யிரட்ட", "யாமங் கொள்பவர் நெடுநா வொண்மணி யொன்றெறி பாணியி னிரட்டும்" (நற். 40 : 1. 132 ; 9-10) 51. அதிரல் : குறிஞ்சிப். 75. 54. பெருமூதாளர் : "பெருமூ தாளரே மாகிய வெமக்கே" (புறநா. 243: 14) : "பெருமூ தாள, னேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்ப", "பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்" (பெருங். 1. 34 : 110-11, 57: 17) 53-4. "பைந்துகின் முடியணிந் தவர்பின், உலவு காஞ்சுகியவர்" (சீவக. 1558) 55 - 8. "சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப" (மதுரைக். 670-71) : "குறுநீர்க் கன்ன லெண்ணுந ரல்லது, கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்" (அகநா. 43: 6-7) ; "நாழிகைக் கணக்கர்", "ஐந்து கேள்வியு மமைந்தோ னெழுந்து, வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்ற, மிருநில மருங்கின் மன்னரெல்லாநின், றிருமலர்த் தாமரைச் சேவடி பணியு, முழுத்த மீங்கிது முன்னிய திசைமே, லெழுச்சிப் பாலை யாகென் றேத்த" (சிலப். 5 : 49, 26 : 26-31) ; "குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்" (மணி. 7: 64-5) ; "கொலைமுகக் களிற னாற்கு நாழிகை சென்று கூற" (சீவக. 2733) ; "புன லுற்றுருகு செப்பின், காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான், மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ" (கம்ப.
|