268
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
60மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு
65ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் 
படம்புகு மிலேச்ச ருழைய ராக
மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
70பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்

கார்காலப். 73) ; "பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு, காமன் றிரியுங் கருவூரா-யாமங்க, ளொன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையு, மொன்றுபோ யொன்றுபோ யொன்று" (சிலப். 5: 49, அடியார். மேற்.)

60. மெய்ப்பை புக்கு : "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66) ; "மெய்ப்பை புக்கு" (சிலப். 16 :107)

66. (பி - ம்.) ‘மிலைச்சர்'
படம்புகும் : (பெரும்பாண். 69) ; "செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக, வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைக், செங்கட்டீவிழி யாத்தெழித் தான்" (சீவக. 431)

67. "செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர்" (அகநா. 157 : 4) ; "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" , "பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை, வளிபொரு தெண்கண் கேட்பி , னதுபோ ரென்னுமென்னையு முளனே", "வாள்வடு விளங்கிய சென்னிச், செருவெங் குருசில்" (புறநா. 31: 9 . 89 :7-9 . 321: 9-10) ; "போரென்ன வீங்கும் பொருப்பன்ன திரள்கொ டிண்டோள்" (கம்ப. பூக்கொய். 18) ; "செருவென்ற மாற்றங் கேட்டுச் சிந்தையி னுவகை பொங்க, மருவொன்று மலங்கன் மார்பும் வாகுபூ தரமும் பூரித்து .......... ஒருப்பட்டான்" (வி. பா. நிவாதகவசர். 17)

69. (பி-ம்.) ‘வேழமும்'

70. யானைத்துதிக்கைக்குப் பாம்பு : "யானைதன், வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை, குன்றுபுகு பாம்பிற் றோன்றும்" (அகநா. 391 : 11-3) ; "நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர், வரைபுரை யானைக்கைந் நூற-வரைமே, லுருமெறி பாம்பிற் புரளுஞ் செரு