269
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் 
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
75மொருகை பள்ளி யொற்றி யொருகை 
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
80யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து

மொய்ப்பிற், சேய்பொரு தட்ட களத்து" (களவழி. 13) ; "பாந்தளன்ன பரேரெறுழ்த் தடக்கையின்" (பெருங். 1. 58: 8) ; "அனந்தனன்னகை யானை" (சீவக. 2521)

73. "வேனிறத் திங்க வயவரா லேறுண்டு, கானிலங் கொள்ளக் கலங்கிச் செவிசாய்த்து, மாநிலங் கூறு மறைகேட்ப" (களவழி.41)

‘வை' கூர்மையாகிய குறிப்புப்பொருளை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல், உரி. சூ. 91, சே : 89, ந.

74. (பி.-ம்.) ‘மாவுஞ் சிந்தித்து'

75. "பள்ளி-படுக்கை; ‘ஒருகைப் பள்ளி யொற்றி' இது முல்லை." (தக்க. 54. உரை)

76. நெடிதுநினைந்து : "நீடு நினைந்து" (முல்லை. 82)

75 - 6. தொல். கற்பியல், சூ, 34, ந. மேற்.

83. ஒரு பிரதியில் இவ்வடியின் பின், "அஞ்சி லோதி யாய்கவி னசைஇ, யேவுறு" என்னும் பகுதி காணப்படுகின்றது.
ஒய்யென : பொருந. 152.

84. (பி.-ம்.) ‘இனழ நெகிழா' "ஏவுறு மஞ்ஞையி னினைந்தடி வருந்த" (மணி. 7: 127) ; "இடருற் றிகல்வாளி, தன்னங்க மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென, அன்னம் பொருவு நடையா ளயிராணி, மன்னன் றிருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே" (கந்த. அயிராணி. 5)