85 | பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர் | 90 | வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிறும் வளையு மார்ப்ப வயிர செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் | 95 | கோடற் குவிமுகை யங்கை யவிழத் |
85. "யவன ரியற்றிய வினைமாண் பாவை, கையேந் தையகனிறையநெய் சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி", "பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல" (நெடுநல். 101-3, 175) ;" பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல" (பதிற்,47: 6) பரூஉச்சுடர் : "பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர்கொளீஇ" (பெருங். 1. 54: 8) 86. எழுநிலைமாடம் : "எழுநிலை மாடஞ் சேர்ந்தும்" (சீவக. 2840) 86-7. "நீர்பாய் மாடமொடு","ஏரணி யமைந்த வெழுநிலை நல்வினை, நீரணி மாடத்து"(பெருங். 1. 38 : 77, 40 : 16-7) 87-8. "கார்வா னின்னுறை தமியள்கேளா" (புறநா. 157: 3) 89. அல்வழிக்கட் ககரமும் அகரமுங்கெடுதற்கு இது மேற்கோள் : தொல். குற். சூ. 78, ந. 90-91. "நீரொலித் தன்ன நிலவுவேற்றானையொடு, புலவுப் படக் கொன்று மிடைதோ லோட்டிப்,புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி" (மதுரைக் 369-71). 92. வயிரும் வளையும் ஆர்த்தல் : முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 93. செறியிலைக்காயா : "செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்ப" (பெருங். 1. 49: 115) "கண்ணிய லஞ்சனஞ் தோய்ந்தபோற் காயாவும், நுண்ணரும் பூழ்த்த புறவு" (கார்.8) "அஞ்சனங் காயா மலர" (திணைமொழி. 21) 94. "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" (அகநா. கடவுள். ) ; "கொன்றைகள்பொன்சொரிய" (தேவாரம், திருப்புகலி.) 95. "செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்" (சிறுபாண்.
|