தோடார் தோன்றி குருதி பூப்பக்கான நந்திய செந்நிலப் பெருவழிவானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
167); "கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்" (பரி. 19: 76) ; "கைவிரிந்தன காந்தளும்" (சூளா. நாட்டு.11) 96. "குருதிப் பூவின் குலைக்காந் தட்டே" (குறுந். 1: 4) 99. திரிமருப்பிரலை : "இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பின் ........................... இரலை", "திரிமருப் பிரலைய காடிறந் தோரே", "புன்கண்கொண்ட திரிமருப் பிரலை" (அகநா. 4: 3-4, 133-18, 371;5) இரலையொடு மடமானுகளல் : "பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி, மடக்கட் பிணையொடு மறுகுவன வுகள" (மதுரைக். 275-6); "அறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவும்" (பட். 245) ; "வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன், இன்புறு துணையொடு மறுவந் துகளத், தான்வந் தன்றே தளிதரு தண்கார்", "துணையோ, டிரலைநன்மா னெறிமுத லுகளு, மாலை", "திரிமருப் பிரலை யண்ண னல்லே, றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ, வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச், செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலை" (குறுந். 65: 1-3, 250 : 1-3.338 : 1-4)' "அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத், திரிமருப் பிரலை புல்லருந் துகள", "அண்ண லிரலை யமர்பிணை தழீஇத், தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே", "இருதிரி மருப்பினண்ண லிரலை ................... மடப்பிணை யருத்தி........................காக்கும்". "திரி மருப் பிரலை........காமர் துணையோ டேமுற வதிய", "திரிமருப் பிரலை தெள்ளறல் பருகிக், காமர் துணையோ டேமுற வதிய", "மடப்பிணை, வலந்திரி மருப்பி னண்ண லிரலையொ, டலங்குசினைக் குருந்தி னல்கு நிழல் வதிய ", "மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற், றிரிமருப் பிரலை பைம்பயி ருகள'; (அகநா. 14: 5-6. 23: 8-9. 34: 4-8, 139 : 10-12, 154 : 8-9, 304 : 8-10, 314: 5-6) ; "கருவியல் கார்மழை கால்கலந் தேந்த, வுருகு மடமான் பிணையோ டுகளும்" (திணைமொழி. 2); "கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூரில்" (தே. திருஞா.); "சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை", "மறியுடன் றழீஇய மடமா னம்பிணை, துள்ளுநடை யிரலையொடு வெள்ளிடைக் குழும", "திரிமருப் பிரலை.................மடமா னம்பிணை கண்டு..................புகன்றுவிளையாடும்" (பெருங். 149: 114, 54 : 38-9 ; 3.1 :141-7) 98-9. "பழமழைக் கலித்த புதுப்புன வரகி, னிரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை" (குறுந். 220 : 1-2)
|