272
100வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின்
முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

100. வெண்மழை : நெடுநல். 19.

101. வள்ளியங்காடு : குறுந். 216 : 2.
பிறக்கொழிய : பெரும்பாண். 351 ; ஐங். 385: 2 ; அகநா. 104: 13 ; புறநா. 15: 15 ;மணி.11: 65.

102. ‘துனை' என்னுஞ்சொல் விரைவென்னும் பொருளையுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 17, ந.

இதன் பொருள்

இப்பாட்டிற்கு 1முல்லையென்று பெயர் கூறினார் ; 2முல்லைசான்ற கற்புப்பொருந்தியதனால். 3இல்லறம்நிகழ்த்துதற்குப் பிரிந்துவருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்த லென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள்கூறலே அவர் கருத்தாயிற்று. "தானே சேறல்" (தொல். அகத். சூ. 27) என்னும் விதியால், அரசன் தானே சென்றது இப்பாட்டு.

இது, தலைவன் வினைவயிற் பிரியக்கருதியதனை அவன் குறிப்பானுணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் 4பெருமுதுபெண்டிர் 5அவன் வினைமுடித்து வருதல் வாய்வது, 6நீவருத்தம் நீங்குவதெனக்கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக்கண்டு வாயில்கள் தம்முட்கூறியது. இது "வாயி லுசாவே தம்முளு முரிய", (தொல். செய். சூ. 199), "எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப" (தொல். கற்பு. சூ. 37) என்பனவற்றாற் கூறினார்.

1இப்பாட்டு முல்லையென்று வழங்குதல், "இது முல்லை" (தக்க. 54, உரை)என்பதனாலு மறியப்படும்.

2"முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" (சிறுபாண். 30)

3சிறுபாண். 169-ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

4"பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப" (முல்லை. 11)

5முல்லை. 20.

6முல்லை. 20-21.