277

பதூஉம், அவ்வாற்றாமைக்கு 1இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாமேன் பதூஉம் நூற்கருத்தாதலுணர்க.

22. [காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து :] காட்டவும் காட்டவும் 2கலுழ்சிறந்து காணாள் - தலைவன் 3புகழும் மானமும் எடுத்துக்காட்டி வற்புறுத்தவும் தோன்றல் சான்ற மாற்றார் பெருமை கூறிக்காட்டி வற்புறுத்தவும் அன்புமிகுதியாற் கலக்கமிக்கு இவை அரசற்கு வேண்டுமென்று மனத்திற் கருதாதவள்,

23. பூ போல் உண் கண் 4புலம்பு முத்து உறைப்ப-பூப்போலும்மையுண்கண்கள் தாரையாகச்சொரியாது தனித்து வீழ்கின்ற முத்துப் போலுந் துளியைத் துளிப்ப,அதுகண்டு,

24. கான் யாறு தழீஇய அகல் நெடு புறவின் -காட்டாறுசூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே,

25. சேண் நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி-தூரியநிலத்தே நாறுகின்ற பிடவமோடே ஏனைப் பசியதூறுகளையும் வெட்டி,

26. வேடு புழை அருப்பம் மாட்டி-பகைப்புலத்தக்குக் காவலாக விருக்கும் வேட்டுவச்சாதியினுடைய சிறு வாயில்களையுடைய அரண்களையழித்து,

26-7. [காட்ட, விடுமுட் புரசை யேமுற வளைஇ :] காட்ட முள் இடு புரசை ஏமம் உற வளைஇ-காட்டின் கண்ணவாகிய முள்ளாலிடும் மதிலைக் காவலுறும்படி வளைத்து,

28. [படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி :] புணரி படும் நீரின் பரந்த பாடி-திரையொலிக்கின்ற 5கடல்போற்பரந்த பாசறைக்கண்ணே கண்படைபெறாது (67) என்க.

புறவிடத்தே (24) எருக்கி (25) மாட்டி (26) வளைஇப் (27) பரந்த பாடி யென்க.

29. உவலை கூரை ஒழுகிய தெருவில்-தழையாலேவேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,

30-31. கவலை முற்றம் காவல் நின்ற தேம் படு கவுள சிறு கண் யானை-நாற்சந்தியான முற்றத்தே காவலாகநின்ற மதம்பாய்கின்ற கதுப்பினையுடையவாகிய சிறியகண்ணையுடைய யானை,


1.(பி. - ம்.) ‘இரங்கல் நிமித்தம்'

2.(பி - ம்.) ‘கலிழ் சிறந்து'

3. புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும்........தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்" (தொல். அகத்திணை, சூ. 41)

4.புலம்பே தனிமை" (தொல். உரி. சூ. 33)

5. கடன்மருள் பெரும்படை", "படைநிலா விலங்குங் கடன்மருடானை" (அகநா. 116 : 16 . 212 : 15) : "கடலென, வானீர்க் கூக்குந்தானை " (புறநா. 17: 36-7)