278

32-3. [ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த, வயல் விளை யின்குள குண்ணாது :] ஒங்கு நிலை கரும்பொடு வயல் விளை கதிர்மிடைந்து யாத்த இன் குளகு உண்ணாது-வளர்கின்ற தன்மையையுடைய கரும்புகளோடே வயலிலேவிளைந்த நெற்கதிர் இடையே நெருங்கப்பட்டுக் கட்டிப்போகட்ட சாவியையும் இனிய 1அதிமதுரத்தழையையும் தின்னாமல்,

33-4. நுதல் துடைத்து அயில் நுனை மருப்பில் தம் கையிடை கெண்டென-அவற்றாலே தம் நெற்றியைத்துடைத்துக் கூர்மையையுடைய முனைகளையுடைய கொம்பினிடத்தே ஏறட்ட தம் கையிடத்தே கொண்டு நின்றனவாக,

35-6. [கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக், கல்லா விளைஞர் கவளங் கைப்ப :] கல்லா இளைஞர் வடமொழி பயிற்றி கவை முள் கருவியின் 2கவளம் கைப்ப-வடமொழியை அடியிலே கல்லாத இளைஞர் 3யானைப்பேச்சான வடமொழிகளைக் கற்றுப் பலகாற்சொல்லிக் கவைத்தமுள்ளையுடைய 4பரிக்கோலாலே கவளத்தைத் தின்னும் படி குத்த,

5யானைக்குச்செய்யும் தொழில்களொழிய வேறொரு தொழிலைக் கல்லாத இளைஞரென்றுமாம்.

37-40. [கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல சைநிலை கடுப்ப நற்போ, ரோடா வல்விற் றூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை :]

கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை (40)-கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டின இருப்பின்கண்ணே,

என்றது 6படங்குகளை.


1 (பி-ம்.) ‘அட்டி மதுரத்தழை'

அதிமதுரத்தழை யானைக்கு விருப்பமுடையது; மதத்தை உண்டு பண்ணுவது: "அதிங்கத்தின் கவளங் கொண்டால், வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகாது" (சீவக. 750); "அதிங்கத்தின், மரங்கொலு மதவேழ மதர்த்தெழு மயக்கத்தால்" (தணிகை. வீராட்ட.63)

2(பி- ம்.) ‘கவழமகைப்ப'

3யானைப் பேச்சான வடமொழிகளாவன. அப்புது அப்புது, அது ஆது, ஐ ஐ என்பன ; சீவக. 1834, ந. பார்க்க.

4பரிக்கோல்-குத்துக்கோல் ; பெரும்பாண். 393-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.

5சிறுபாண். 32-3, உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க

6படங்குகள்-கூடாரங்கள் ; "பாடி வீடுகொள் படங்கென" (தக்க. 54)