பத்துப்பாட்டு | வந்தணர் வெறுக்கை யறிந்தோர்சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே | 265 | வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக | 270 | நசையுநர்க் கார்த்து மிசைபே ராள வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள் பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் | 275 | சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி |
266. "குருகு பெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே", "குருகு பெயர்க்குன்றங் கொன்றான்" (சிலப். 24); "குருகுபெயர்க் குன்றங் கொன்றோன்" (மணி.5 : 13); "மலையைக் கொல்லுமென்றது, மலை பண்டு பிராணனுடையவாய்ப் பறந்து திரிந்தமையின்; ‘குன்றம் ......... கொற்றத்து' இது திருமுருகாற்றுப்படை" (தக்க. 170, உரை) 267. "விண்பொரு நெடுவரைப் பரிதியின்" (முருகு. 299) "விண்குத்து நீள்வரை வெற்ப" (நாலடி. 226) குறிஞ்சிக்கிழவ: "குறிஞ்சிக்கிழவனென் றோதுங் குவலயமே" (கந்தரலங்காரம், 5) 269. பெரும்பெயர் : "பெரும்பெய ரியவுள்" (முருகு. 274); "தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி" (பெரும்பாண். 460); "பெரும்பெயர் முருக" (பரி. 5 : 50); "செல்வன் பெரும்பெ ரேத்தி" (அகநா. 98 : 18) "பெரும்பெயர் வேந்தன்" (பு. வெ.); "பெரும்பெயர்ப் பிரமன்" (சீவக. 207); "பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு" (சிவஞான போதம், சிறப்பு.); "பெரும்பெயரே பெயராக வந்த, வொருவாய்மை தன்னை நினையினு முள்ள முருகுவதே" (பஞ்சாக்கர. 5) 271. அலந்து, இடுக்கண் பட்டென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 352, உரை. 272. "மண்டமர் பலகடந்து" (கலித். 1 : 8) 273. நெடுவேன்: 211-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க. 275. "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சீர்மிகு முருகன்" (அகநா. 59 : 10-11) சூர்மருங்கறுத்த: "மன்மருங்கறுத்த மழுவா
|