280

ணிய 1ஆசினையுடைய ஒள்ளியவாளை விரவின நிறத்தையுடைய கச்சினாலே பூண்ட மங்கையர்,

48-9. நெய் உமிழ் சுரையர் நெடு திரி கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட-நெய்யைக்காலுகின்ற திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் நெடிய திரியை எங்குக்கொளுத்தி ஒழுங்காயமைந்த விளக்குகள் அவியுந்தோறும் தம் கையிற் பந்தத்தைக் கொளுத்த,

50. நெடு நா ஒள் மணி நிகழ்த்திய நடு நாள்-நெடிய நாக்கினையுடைய ஒள்ளியமணி எறிந்துவிட்ட நடுயாமத்தும்,

கோயில் பணி மடங்கினால் மணியெறிந்துவிடுதல் இயல்பு.

இனி யானை குதிரைமுதலியன துயில்கோடலின் அவற்றின் மணியோசை அடங்கிய நடுநாளொன்றுமாம்.

51-2. 2அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு-புனலிபூத்த அசைகின்ற கொடியினையுடைய சிறுதூறுகள் துவலையோடே வருதலையுடைய அசைந்த காற்றிற்கு அசைந்தாற்போல,

சிதர்-மெத்தெனவுமாம்.

53-4. துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை பெருமூதாளர் ஏமம் சூழ-மயிர்க் கட்டுக் கட்டிச் சட்டையிட்ட, அனந்தரினையும் பெரிய ஒழுக்கத்தினையுமுடைய மெய்காப்பாளர் காவலாகச் சூழ்ந்துதிரிய,

55-6. [பொழுதளந் தறியும் பொய்யா மாக்க, டொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி :]

மாக்கள் பொழுது அளந்து அறியும் பொய்யா காண்கையர்-3அறிவில்லாதோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியையுடையார் ,

தொழுது தோன்ற வாழ்த்தி-அரசனைவணங்கி விளங்க வாழ்த்தி,

57. எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்-திரையெறிகின்ற கடல்சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லுதற்குச் செல்கின்றவனே .

57-8. நின் குறுநீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப-4கிடா


1(பி - ம்.) ‘கவிசினையுடைய', ‘வாய்ச்சினையுடைய'

2 "அதிரல்-காட்டுமல்லிகை" (சிலப். 13 : 156, அரும்பத. ) ; "அதிரல்-மோசிமல்லிகை" (மேற்படி அடியார்.)

3பொருந, 91, ந. குறிப்புரையைப் பார்க்க.

4கிடாரம் - நீர்பெய்துவைக்கும் ஒருவகைப் பாத்திரம்; இது கடாரமெனவும் வழங்கும் ; "காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ" (குலோத். உலா)