283

78. நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி-தனக்கு எக்காலமும் விளக்கந்தங்கும் 1வஞ்சிக்கு நன்றாகிய வெற்றியை நிலைபெறுத்தி,

79. அரசு இருந்து பனிக்கும் பாசறை-பகையரசிருந்து நடுங்குதற்குக் காரணமான பாசறை,

பனிக்கும் பாசறை, "நோய்தீருமருந்து" (கலித். 60:18) போனின்றது.

முரசு முழங்கு பாசறை-வெற்றிக்களிப்புத்தோன்ற முரசுமுழங்கும் பாசறை,

80-84. [இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து, நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு, நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு, மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து, மேவுறு மஞ்ஞையினடுங்கி யிழைநெகிழ்ந்து :]

வதியுநன் இன் துயில் காணாள் (80)- தன்னிடத்தே தங்குகின்றவனை இனிய துயில் கொள்ளுதலைக் காணாளாய்,

நெஞ்சு ஆற்றுப்படுத்த புலம்பொடு (81)-அவன் தன்னெஞ்சம் தான்போகின்ற வழியிற் செலுத்துதலால் தனக்குண்டான தனிமையாலே,

இது, "நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்" (தொல். அகத். சூ. 43)என்பதாம்.

நிறை தபு புலம்பு (81)-தனது நிறைகெடுத்த தனிமை,

நீடு நினைந்து (82)-இங்ஙனம் பிரிந்தாலன்றி இவ்வரசியல் நிகழாதென்று நினைத்து,

ஓடு வளை திருத்தியும் (82)-கழலுகின்ற வளையைக் கழலாமற்செறித்தும்,

மையல்கொண்டும் (83) - மயக்கங்கொண்டும்,

ஒய்யென உயிர்த்தும் (83)-விரைய நெட்டுயிர்ப்புக்கொண்டும்,


1வஞ்சி-பகைமேற் செய்வோர்க்குரிய அடையாள மாலை ; மேற்சென்று பொருது பகைவரை அவர்க்கு உரிய இடத்தே வெல்ல நினைந்தானென்பது இதன் கருத்து. பகைவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வெல்லுதல் அருமையாதலின் அவ்வெற்றி சிறந்தது ; "சிறுபடையான் செல்லிடஞ் சேரினுறுபடையா, னூக்க மழிந்து விடும்", "சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த, ருறைநிலத்தோ டொட்ட லரிது" (குறள், 498-9), "ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர், மாணிழை மகளிர் நாணிலர் கழியத், தந்தை தம்மூ ராங்கட், டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே" (283.78: 9-12)என்பவை இக்கருத்தை வலியுறுத்தும்.