ஏவு உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து (84)-அம்பு தைத்த 1மயிற்போல நடுங்கி அணிகலங்கள் நெகிழ்ந்து கண் புலம்பு முத்துறைப்ப (23) எனக் கூட்டுக. துயர் உழந்து (80) தேற்றியும் (82) - அதனைக்கண்டு தானும் வருத்தமுற்று இவன் ஆற்றியிராளென்று துணிந்தும், 85. பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல - பொற்பாவை ஏந்தி நின்ற 2தகளியிலே பரியவிளக்கு நின்றெரிய, விளக்கு : ஆகுபெயர். 86. இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து-தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று உயர்ந்த 3 ஏழு நிலையினையுடைய மாடத்திடத்து, 87. முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி-மூட்டுவாய் (பி - ம். கூடுவாய்) களினின்றும் சொரிதலைச்செய்யும் பெருமையையுடைய திரண்ட அருவிகளினுடைய. 88. இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்-இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசைக்கண்ணே தலைவன் தான்கூறிய பருவம் பொய்யாமல் வருவனென்னுங் கருத்தினளாகலின் அவன்வரவினையே கருதிக்கிடந்தோளுடைய, 89. அஞ்செவி நிறைய ஆலின-அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன ; 89-91. [வென்றுபிறர், வேண்டுபுலங் கலந்த வீண்டுபெருந்ததானையொடு, விசயம் :] வென்று-வெட்டிவென்று, பிறர் வேண்டு புலம் கவர்ந்த விசயம்-பகையரசர் எக்காலமும் விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட வெற்றியாலே, ஈண்டு பெரு தானையொடு-திரளுகின்ற பெரிய படையோடே, அரசன் வினைமுடித்தகாலத்தே விரைந்துபோந்தானாகலின், அது கேட்டு வருகின்ற படையென்பது தோன்ற ஈண்டுபெருந்தானையென்றார்.
1.மயில் முல்லைக்குமுரியது ; "முல்லைக்குப்..................புள் கானங்கோழியும் மயிலும் சிவலும்" (இறை. சூ. 1, உரை) ; "இயலு மன்ன முந் தோகையு மெதிரெதிர் பயில, வயலு முல்லையு மியைவன பலவுள மருங்கு " (பெரிய, திருக்குறிப்புத். 45) 2. தகளி-அகல் ; "வையந் தகளியா" (திவ். முதற்றிரு. 1) ; இப்பெயர் தாளி யெனவும் வழங்கும். 3"ஏழுயர் மாட மூதூர்" (வி. பா. நிரைமீட்சி. 118)
|