289
10மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்குவிளங்க
மேதக மிகப்பொலிந்த
15வோங்குநிலை வயக்களிறு
கண்டுதண்டாக் கட்கின்பத்
துண்டுதண்டா மிகுவளத்தா
னுயர்பூரிம விழுத்தெருவிற்
பொய்யறியா வாய்மொழியாற்
20புகழ்நிறைந்த நன்மாந்தரொடு
நல்லூழி யடிப்படரப்
பல்வெள்ள மீக்கூற
வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக
பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி

6-10. "மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப" (பதிற். 90: 1)

11. தொடுப்பு : "தொடுப்பே ருழவ ரோதைப் பாணியும்" (சிலப். 27: 230)

ஆயிரம் : "வேலி யாயிரம் விளையுட் டாக" (பொருந. 246-7)

10-11. "வான மின்னுவசிவு பொழிய வானா, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய" (மலைபடு. 97-8)

12. (பி-ம்.) ‘எதிர்புந்த'

14. (பி-ம்.) ‘மேதகப் பொலிந்த'

17. (பி-ம்.) ‘தண்டாவிகு'

16-7. ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பாவிற்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை.

18. (பி-ம்.) ‘பூரிய விழுத்தெரு'

21. "நல்லூழி யாவர்க்கும் பிழையாது வருதனின்" (கலித். 99:5-6) ; "முத லூழியின்பம், வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்" (தஞ்சை. 286) ; "வேதமு மெய்ம்மையு மாதியுகம்போலத் தலைசிறப்ப வந்தருளி" (விக்ரம. மெய்க். "பூமாலை") ; "ஆதியுகங் கொழுந்து விட்டுத் தழைத்தோங்க" (இரண்டாம் இராசஇராச. மெய்க். "பூமருவிய பொழில்")

22. "ஆயிர வெள்ளம் வாழிய பலவே" (பதிற். 21:38)

24. பிணக்கோட்ட களிறு : "வேலாண் முகத்த களிறு" (குறள், 500)