29

1 - திருமுருகாற்றுப்படை

போர்மிகு பொருந குரிசி லெனப்பல
யானறி யளவையி னேத்தி யானாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
னின்னடி யுள்ளி வந்தனெ னின்னொடு
280 புரையுந ரில்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
யளியன் றானே முதுவா யிரவலன்
285வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
வினயவு நல்லவு நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
290மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி

ணெடியோன்" (மணி. 22 : 25); "மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போல்" (தொல். புறத். சூ. 13, ந. உரை. மேற். )

279-80. நின்னொடு புரையுந ரில்லாப் புலமையோய்: "நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்" (தே. தனித்திருத்தாண்டகம்);

 "மற்றாருந் தன்னொப்பா ரில்லாதான் காண்" (தே. திருவாரூர்); "தனக்குவ மையில்லாதான்" (குறள், 7)

281. "நீசில மொழியா வளவை" (சிறுபாண். 235)

282. கூளியர்: புறநா. 23 : 5.

283. "சாறயர் களத்தின் வீறுபெறத் தோன்றி" (சிலப். 6 : 162) (பி-ம்.) ‘வேறுபெறத் தோன்றி'

282-3. "சாறுகொண்ட களம்போல, வேறுவேறு பொலிவு தோன்ற" (புறநா. 22 : 16-7)

284. "முதுவா யிரவல" (சிறுபாண். 40); "செல்லு முதுவா யிரவல" (பதிற். 66 : 3); "முதுவா யிரவல" (புறநா. 48 : 7)

285. "வந்தேன் பெரும வாழிய நெடிதென" (பெரும்பாண். 461)

287. தே. 6563.

290. "பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விள நலங் காட்டி" (சிலப். 9 : 34-5)

289-90. "அறுமுகமில்லை; அணிமயில் இல்லை யென்று சொல்லு வார்களென்று வேறு காட்டினாள்; தலைமகள் கடம்புசூடி உடம்பிடி யேந்தித் தன்னைக் குமரனென்று பிறர் கருத வந்த காரணம், ‘பண்டை ............ காட்டி" என்றாராதலால்" (சிலப்.குன்றக். அரும்பத.)