290
25னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி
ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
பிணையூப மெழுந்தாட
வஞ்சுவந்த போர்க்களத்தா
னாண்டலை யணங்கடுப்பின்
30வயவேந்த ரொண்குருதி
சினத்தீயிற் பெயர்புபொங்கத்
தெறலருங் கடுந்துப்பின்
விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற்
றொடித்தோட்கை துடுப்பாக
35வாடுற்ற வூன்சோறு
நெறியறிந்த கடிவாலுவ
னடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு முருகயர
வமர்கடக்கும் வியன்றானைத்
40தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்

25. (பி-ம்.) ‘பேஎய்'

26. துணங்கை : பெரும்பாண். 235-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

25-6. "நிணந்தின் வாய டுணங்கை தூங்க" (முருகு. 56) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

28. (பி-ம்.) ‘வந்ந்த'

34. "தோளுங் கொண்டு துடுப்பெனத் துழாவிக் கொள்ளீர்" (தக்க. 748)

34-5. "பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலைத், தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகந்து" (பு. வெ. 160)

34-6. தக்க. 748, உரை, மேற்.

29-35. "முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி, னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா. 26:8-11)

37. "பிறக்கடி யொதுங்காப் பூட்கை" (பதிற். 80:8)

38. (பி-ம்.) ‘படையோர் முருகயர'

29-38. "முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித் தோட்டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்ட" (சிலப். 26:242-4)