293
தண்டாது தலைச்சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற்
70றென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்தொழுகிய
கொற்றவர்தங் கோனாகுவை
75வானியைந்த விருமுந்நீர்ப்
பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
80தின்னிசைய முரசமுழுங்கப்
பொன்மலிந்த விழுப்பண்ட
நாடார நன்கிழிதரு
மாடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
85துறைமுற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
னூர்கொண்ட வுயர்கொற்றவ
நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்

70 - 71. மு. புறநா. 17:1-2.

72. மு. ஒ. மதுரைக். 124 ; பதிற். 90:8.

70 - 72. "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்", "தென்குமரி வடபெருங்கற், குணகுடகட லாவெல்லை, குன்றுமலை காடுநா, டொன்றுபட்டு வழிமொழிய" (புறநா. 6:1-4, 17:1-4)

80. கப்பலில் முரசம் முழங்குதல் : "ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன், றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க், கோடு பறை யார்ப்ப ................ ஓடியதை யன்றே" (சீவக. 501)

82. (பி-ம்.) ‘நாடாரக்கரைசேர நெடுங்கொடிமிசை நன்கிழி தரும்'

89. (பி-ம்.) ‘நீர்தெவுநிரை'

தெவ்வுகொள்ளுதலாகிய குறிப்புப்பொருளை யுணர்த்து மென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி, சூ. 49, சே ; 47, ந ; இ-வி. சூ. 290.