294
90பாடுசிலம்பு மிசையேற்றத்
தோடுவழங்கு மகலாம்பியிற்
கயனகைய வயனிறைக்கு
மென்றொடை வன்கிழா அ
ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மணி
95யிரும்பு ளோப்பு மிசையே யென்று
மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப
ஒருசார், விழவுநின்ற வியலாங்கண்
முழவுத்தோண் முரட்பொருநர்க்
100குருகெழு பெருஞ்சிறப்பி
னிருபெயர்ப் பேராயமொ
டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும்
பொலந்தாமரைப் பூச்சூட்டியு
நலஞ்சான்ற கலஞ்சிதறும்
105பல்குட்டுவர் வெல்கோவே

90. (பி-ம்.) ‘ஏத்தத்'

92. (பி-ம்.) ‘கயமகைய'

91-3. ஆம்பி, கிழாஅர் : "ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும்" (சிலப். 10:110)

89-93. கிழார் பூட்டைப்பொறி யென்னும் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; சிலப். 10:110, அடியார்.

94. (பி-ம்.) ‘அதரிகொள்பவரிசை'

96. சிறுபாண். 148-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

98. "விழவுநின்ற வியன்மறுகில்" (மதுரைக். 328)

99-102. பொருந. 125-7ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க ; "தெருவி னலமருந் தெண்கட் டடாரிப், பொருவில் பொருநநீ செல்லிற்-செருவில், அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும், நெடுந்தடக்கை யானை நிரை" (பு. வெ. 218)

99-103. பொருநருக்குப் பொற்றாமரைப் பூச்சூட்டல் : பொருந. 159-60-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

105. "பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது, ‘பல்குட்டுவர்' என்பதுபோல" (புறநா. 195, உரை)