295
கல்காயுங் கடுவேனிலொ
டிருவானம் பெயலொளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
110நெல்லி னோதை யரிநர் கம்பலை
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
சலம்புகன்று சுறவுக்கலித்த
புலவுநீர் வியன்பௌவத்து
நிலவுகானன் முழவுத்தாழைக்
115குளிர்ப்பொ தும்பர் நளித்தூவ
னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ
டொலியோவாக் கலியாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
120வியன்மேவல் விழுச்செல்வத்
திருவகையா னிசைசான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடிகெழீஇய நானிலவரொடு
தொன்றுமொழிந்து தொழில்கேட்பக்
125காலென்னக் கடிதுராஅய்
நாடுகெட வெரிபரப்பி

106. "மலைவெம்ப", "விறன்மலை வெம்ப", "இலங்குமலை வெம்பிய", "கல்காய்ந்த காட்டகம்" (கலித். 13:5, 20:5, 23:3, 150:11)

114. நிலவு மணலுக்கு உவமை : பொருந. 213-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

115. (பி-ம்) ‘குளிர்ப் பொதும்பு'

116. திமில் வேட்டுவர் : "வன்கைத் திமிலர்" (மதுரைக். 319) ; "பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே" (குறுந். 123 : 5)

124. மு. ஒ. மதுரைக். 72

126. "இழிபறியாப் பெருந்தண்பணை, குரூஉக்கொடிய வெரிமேய, நாடெனும்பேர் காடாக" (மதுரைக். 154-6) ; "முனையெரி பரப்பிய", "ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ் புகை மாதிர மறைப்ப" (பதிற். 15:2, 71:9-10) ; "வாடுக விறை வநின் கண்ணி யொன்னார், நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே",