| சீருடைய விழுச்சிறப்பின் | 135 | விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி னிலங்குவளை யிருஞ்சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கையோர் நசைப்பொருந செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென் | 140 | றஞ்சுவரத் தட்கு மணங்குடைத் துப்பிற் கோழூஉன்குறைக் கொழுவல்சிப் புலவுவிற் பொலிகூவை யொன்றுமொழி யொலியிருப்பிற் றென்பரதவர் போரேறே | 145 | யரியவெல்லா மெளிதினிற்கொண் டுரிய வெல்லா மோம்பாது வீசி |
135. "முதிர்வா ரிப்பி முத்தம்" (புறநா. 53 :1) 137 - 8. பாக்கமென்பதற்கு அரசனிருப்பென்று பொருள்கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர் ;பதிற். 13 : 12, உரை. 135 - 8. கொற்கை முத்தம் : "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" (நற். 23 : 6) ; "பொறையன் செழியன் பூந்தார் வளவன், கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை, பாவை முத்த மாயிதழ்க் குவளை" (யா. வி. சூ. 95, மேற்.) ; சிறுபாண். 57 - 62-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 140. (பி-ம்.) ‘அஞ்சுவரக்கடக்கும்' 141. "புகழ்படப் புண்ணிய கோழூன் சோறும்" (மதுரைக். 533) ; "ஊன்சோற் றமலை", "பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள்ளமலை" (புறநா. 33 : 14, 177 : 14) ; "ஊன்களோடவைபதஞ் செய்ய" (கந்த. மகேந்திர. நகர்புகு. 29) 143. ஒன்றுமொழி : "ஒன்றுமொழிக் கோசர்" (குறுந். 73 : 4) 146. ஓம்பாதுவீசி : "ஓம்பா வள்ளல்" (மலைபடு. 400) ; "ஓம்பா வீகையின் வண்மகிழ் சிறந்து" (பதிற். 42 : 13) ; "ஓடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக், கடந்தடு தானைச் சேர லாதனை", "ஓம்பா தீயு மாற்ற லெங்கோ" (புறநா. 8 : 4 - 5, 22 : 33); "ஓம்பா வீகையும்" (பு. வெ. 189) 145 - 6. "கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி" (மதுரைக். 220 - 24) ; "நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து, நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ, யருவிலை
|