298
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
யகநாடு புக்கவ ரருப்பம் வௌவி
150யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசி
லுறுசெறுநர் புலம்புக்கவர்
கடிகாவி னிலைதொலைச்சி

நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி", "பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, வரிய வென்னா தோம்பாது வீசி", "வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 2-ஆம் பத்தின் பதிகம், 44 : 3 - 4, 53 : 1) ; "அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும்-செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்" (பு. வெ. 16) ; சிறுபாண். 247 - 8-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

149. "அம்புமி ழயிலருப்பம் ............. கொண்டு", "நாடழிய வெயில்வௌவி", "நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி" (மதுரைக். 67 - 9, 187, 693)

அகமென்பதற்குப் பொருள் மருதமென்பதற்கும் (சீவக. 1613, ந,), மதில் பெரும்பான்மையும் மருதநிலத்திடத்தென்பதற்கும் (தொல். புறத். சூ. 9, ந.) இவ்வடி மேற்கோள்.

150, மு, "யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து" (பதிற். 15 : 1)

152 - 3. பகைவர்களுடைய காவன்மரங்களை அழித்தல் : "பலர் மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின், வடியுடை முழுமுத றுமிய", "வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே", "பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாரை முழுமுத றுமியப் பண்ணி" (பதிற். 11 : 12 - 3, 12 : 1 - 3, 5-ஆம் பத்தின் பதிகம்); "வடிநவி னவியம் பாய்தலி னூர் தொறும், கடிமரந் துளங்கிய காவும்", "நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும், கடிமரந்தடியு மோசை", "கடிமரந் தடிதல்" (புறநா. 23 : 8 - 9, 36: 7 - 9, 57 : 10) ; "பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு, வேம்பு முதறடிந்த ........... பொறைய" (சிலப். 27 : 124 - 6)

153. (பி - ம்.) ‘ கடிகாவு '

இகரவீற்று உரிச்சொல்லின் முன் வல்லினம் இயல்பாக வந்ததற்கு, ‘கடிகா' என்பது மேற்கோள் ; தொல். தொகை. சூ. 16. ந.