| யிழிபறியாப் பெருந்தண்பணை | 155 | குரூஉக்கொடிய வெரிமேய நாடெனும்பேர் காடாக வாசேந்தவழி மாசேப்ப வூரிருந்தவழி பாழாக விலங்குவளை மடமங்கையர் | 160 | துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப வவையிருந்த பெரும்பொதியிற் கவையடிக் கடுநோக்கத்துப் பேய்மகளிர் பெயர்பாட வணங்குவழங்கு மகலாங்க | 165 | ணிலத்தாற்றுங் குழூஉப்புதவி னரந்தைப் பெண்டி ரினைந்தன ரகவக் கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் | 170 | குடுமிக் கூகை குராலொடு முரலக் கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக் |
154 - 5. மதுரைக் 126-ஆம் அடியின் குறிப்புரையைப்பார்க்க. 159 - 60. மகளிர் துணங்கையாடல் : "துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி " (மதுரைக். 329) ; "விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல" (நற். 50 : 3) ; "மகளிர் தழீஇய துணங்கை யானும்", "வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன" (குறுந். 31 : 2, 364 : 6) ; கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்" "முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாக" (பதிற். 13 : 5, 52 : 14) ; "தளரிய லவரொடு, துணங்கையாய்", "தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே ", " நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ள " (கலித். 66 : 17 -8, 70 : 14, 73 : 16) ; " முழுவிமிழ் துணங்கை தூங்கிய விழவின் " (அகநா. 336 : 16) துணங்கைக் குரவையும், "துணங்கையர் குரவையர்" (சிலப். 5 : 70) 162 - 3. கவையடிப்பேய் : சிறுபாண். 197-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 170. " துய்த்தலைக் கூகை, கவலை கவற்றுங் குராலம் பறந்தலை" (பதிற். 44 : 18 - 19)
|