3

1 - திருமுருகாற்றுப்படை

 5செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்

5. செறுநர்த் தேய்த்த : "செறுநர்த் தேய்த்து" (முருகு. 99); "படியோர்த் தேய்த்த" (மலைபடு. 423 ; பதிற். 79 : 6)

செல்லுறழ் தடக்கை : "நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை" (பதிற். 52 : 10)

இவ்வடி கட்டளைப் பொழிப்பு மோனைக்கும் (தொல். செய். சூ. 92,.), உறழென்பது வினையுவமத்திற்கும் (தொல்.உவம.சூ.12,இளம்.), பயனிலை யுவமத்திற்கும் (தொல்.உவம.சூ.14,பேர்.) உரிய உவமவுருபாமென்பதற்கும் மேற்கோள்.

6."செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறநா.3 : 6)

மறுவில் கற்பு : "செயிர்தீர் காட்சிக் கற்பு" (தொல். கள. சூ. 22 : 2); "தீதிலா வடமீனின் றிறம்" (சிலப். 1 : 27)

5-6. "படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை, நெடுவேள்" (அகநா. 22 : 5-6)

1-6. செய்யுளுறுப்பாகிய நோக்கின்வகை மூன்றனுள் இடையிட்டு நோக்கும் நோக்கிற்கு இவ்வடிகள் மேற்கோள்; ‘உலகம்................ கணவனென்ற வழி, ஒளியென்பது அதன் அயற்கிடந்ததனை நோக்காது கணவனை நோக்குதலின், இடையிட்டு நோக்கிற்று'(தொல். செய். சூ. 98,இளம்.)

7. கமஞ்சூன் மாமழை : "மழங்கு கடன் முகந்த கமஞ்சூன் மாமழை" (நற். 347 : 1); "கமஞ்சூன் மாமழை கார்பயந் திறுத்தென" (அகநா. 134 : 2) ;"கமநிறைத் தியலும்" என்பதற்கு இது மேற்கோள் ;தொல். உரி. சூ. 57, இளம். சே. ந. ; இ-வி. சூ. 290, உரை.

8. வாள்போழ் விசும்பு : " வாள்போழ் வானத்து வயங்குகதிர் சிதறி" (நாற். சூ. 147, மேற்.); "விண்ணம் போழும் வாள்" (பாகவதம், 1.8 : 13)

வள்ளுறை: "மைப்பனை யனைய நுந்தம் வள்ளுறை சிதறி" (திருவால. 12 : 6)

8-9. வள்ளுறை........ தலைஇய ............ கானம் : "நுண்ணுறை யழி துளி தலைஇய" (குறுந். 35 : 4), "துளிதலைத் தலைஇய சாரல்" (அகநா. 132 : 9)