பத்துப்பாட்டு | யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென வன்புடை நன்மொழி யளைஇ விளிவின் றிருணிற முந்நீர் வளைஇய வுலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய | 295 | பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் வேறுபஃ றுகில னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வேரற் பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு |
292. அன்புடை நன்மொழி: "ஈர நன்மொழி", "ஆர்வ நன் மொழி" (சிறுபாண். 93. 99); "இன்சொலா லீர மளைஇ .............. சொல்" (குறள், 91); "அன்புட னளைஇய வருண்மொழி" (மணி. 5 : 63) 294. (பி-ம்.) ‘ஒரு நீயாக' 294-5. இவ்வடிகள், "இன்மை யுரைத்தாற் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை" என்பதற்கு மேற்கோள்! கலித். 43, ந. 63-295. "முருகாற்றுப்படையுள், புலம் பிரிந்துறையும் சேவடியெனக் கந்தழிகூறி நின்னெஞ்சத்து இன்னசை வாய்ப்பப் பெறுதியெனவம் கூறி அவனுறையு மிடங்களுங்கூறி ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசில் நல்குமெனவுங்கூறி ஆண்டுத் தான்பெற்றபெரு வளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை யென்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க, இனி, முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை ஆற்றுப் படுத்ததென்பது பொருளாகக் கொள்க" (தொல். புறத். சூ. 36, ந.) 296. அருவிக்குத்துகில்: "அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவி" (குறிஞ்சிப். 55); "அறுவைத், தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத், தண்பல விழிதரு மருவி" (புறநா. 154 : 10. 12); "மாநீல மாண்டதுகி லுமிழ்வ தொத்தருவி, மானீல மால்வரை நாடகேள்" (திணைமா. 6); "நதிதோறுந் துகில்புரை நறுநீரிற் றோய்வன" (கம்ப. வனம்புகு. 11); "பௌவநீ ராடைத் தரணிமான் மார்பிற் பயிலுமுத் தரியமும் போன்று ............... தெய்வமா நதிநீர் பரக்கும்" (வி. பா. சிறப்பு. 8) 297. ஆரமுழுமுதல்: "வாழை முழுமுதல்" (முருகு. 307) 298. "பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக், கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி" (குறுந். 134 : 4-5)
|