| களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர நல்லேர் நடந்த நசைசால் விளைவயற் பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள | 175 | வாழா மையின் வழிதவக் கெட்டுப் பாழா யினநின் பகைவர் தேஎ மெழா அத்தோ ளிமிழ்முழக்கின் மாஅத்தா ளுயர்மருப்பிற் கடுஞ்சினத்த களிறுபரப்பி | 180 | விரிகடல் வியன்றானையொடு முருகுறழப் பகைத்தலைச்சென் றகல்விசும்பி னார்ப்பிமிழப் பெயலுறழக் கணைசிதறிப் பலபுரவி நீறுகைப்ப | 185 | வளைநரல வயிரார்ப்பப் |
172. (பி - ம்.) ‘ சண்பமன்று ' " களிறுமாய்க்குங் கதிர்க்கழனி " (மதுரைக். 247) கண்பு : பெரும்பாண். 220 ; மலைபடு. 454 ; பெருங். 2. 19 : 187. 174. பன்மயிர்ப்பிணவு : " பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது " (பெரும்பாண். 342) 175 - 6. "செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப" (பொருந. 134) 179. கடுஞ்சினத்த களிறு : " கடுஞ்சினத்த கொல்களிறு " (புறநா. 55 : 7) ; மதுரை. 44 - 7-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 170. தானைக்குக்கடல் : முல்லை. 28-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 180 - 81. " செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி " (புறநா. 6 : 11 - 2) 183. "விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉ" (பரி. 22:5) ; "காலமாரியி னம்புதைப்பினும்" (புறநா. 287:3) ; "பாயமாரிபோற் பகழி சிந்தினார்", மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோல், மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கினானே" (சீவக. 421, 451) ; "நாற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக், கடுங்கணை சிதறி" (பெருங். 3. 27 : 98 : 9) 185. முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|