301
பீடழியக் கடந்தட்டவர்
நாடழிய வெயில்வௌவிச்
சுற்றமொடு தூவறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
190வியன்கண் முதுபொழின் மண்டில முற்றி
யரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது
குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றங்
195குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற்
றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்க

187. (பி - ம்.) ‘ நாடுகெட வெயில்'

மதுரைக். 149 - ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய" (பட்டினப்.269)

189. " பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்ப " (மதுரைக். 229) ; " எய்யாத் தெவ்வ ரேவல் கேட்ப " (பொருந. 133)

192. "முன்றிணை முதல்வர் போல நின்று " (பதிற். 85 : 5) ; " தொல்லோர் சென்ற நெறிய போலவும் " (புறநா. 58 : 25)

193. பிறை தொழப்படுதல் : "தொழுதுகாண் பிறையிற் றோன்றி", "பலர்தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே " (குறுந். 178 : 5, 307 : 1 - 3) ; " ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென மாலை " (அகநா. 239 : 9 - 10) ; " அந்தி யாரண மந்திரத் தன்புட னிவனை, வந்தி யாதவர் மண்ணினும் வானினு மில்லை " (வி. பா. குருகுலச். 6)

194. மு. சிலப். 25 : 92.

193 - 4. " வளர்பிறை போல வழிவழிப் பெருகி " (குறுந். 289 : 1) ; " சுடர்ப்பிறை போலப், பெருக்கம் வேண்டி " (பெருங். 2. 6 : 35 - 6)

195 - 6. " நீள்கதி ரவிர்மதி நிறைவுபோ னிலையாது, நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ " (கலித். 17 : 7-8) ; " குறைமதிக் கதிரென மாய்கவென் றவமென்றான் " (கந்த. மார்க்கண்டேயப். 59)

இவ்வடிகள் சிலப். 10:1-3, அடியார். மேற்.

193 - 6. "ஆநா ணிறைமதி யலர்தரு பக்கம்போ, னாளினாளின் ............. நீர்நிலம் பரப்பி .......... வெண்மதி நிறையுவா போல, நாள்குறை படுதல் காணுதல் யாரே " (பரி. 11 : 31 - 8) ; " பெரியவர் கேண்மை பிறைபோல நாளும், வரிசை வரிசையாக நந்தும் - வரிசையால், வானூர்