302
முயர்நிலை யுலக மமிழ்தொடு பெறினும்
பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ
200டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி
205யீத லுள்ளமொ டிசைவேட் குவையே
யன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ
கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளக்கு நல்லிசை

மதியம்போல் வைகலுந் தேயுமே, தானே சிறியார் தொடர்வு" (நாலடி. 125) ; " நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு " (குறள், 782)

197. "அரும்பெற லமிழ்த மார்பத மாகப், பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை " (குறுந். 83 : 1 - 2)

199. மலர்தலையுலகம் : மதுரைக். 237.

கடலேணி யுலகம் : "நளியிரு முந்நீ ரேணி யாக, ............ வானஞ் சூடிய, மண்டிணி கிடக்கை " (புறநா. 35 : 1 - 3)

201. (பி - ம்.) ‘ பகைவரஞ்சி '

" வலியரென வழிமொழியலன் " (புறநா. 239 : 6) ; " உற்ற விடத்திலுயிர்வழங்குந் தன்மையோர், பற்றலரைக் கண்டாற் பணிவரோ (மூதுரை. 6)

202. புலமென்பதற்கு நிலமென்று பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர் ; சீவக. 28, ந.

204. (பி - ம்.) ‘ பழிநமக்கொழுக '

203 - 4. " வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ, சங்கம் போல் வான்மையார் சால்பு " (பு. வெ. 185)

205. ஈதலால் இசை உறுதல் : குறள், 231 - 2.

203 - 5. " புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி, னுலகுடன் பெறினுங் கொள்ளலர் " (புறநா. 182 : 5 - 6)

208. ஒ. பெரும்பாண் 38.

209. சேண்விளங்கு நல்லிசை : " சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ " (பதிற். 88 : 36)