| தேரோடு மாசிதறிச் | 225 | சூடுற்ற சுடர்ப்பூவின் பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின் விழுமிய பெரியோர் சுற்ற மாகக் கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப் | 230 | பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார் பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப் படுகண் முரசங் காலை யியம்ப வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர் |
223 - 4. இரப்போர்க்கு மா சிதறல் : " இரப்போர்க், கீத றண்டா மாசித றிருக்கை " (பதிற். 76 : 7 - 8)தேரோடு குதிரைகளைக்கொடுத்தல் : பொருந. 163 - 5 ; பெரும்பாண். 487 - 90. 220 - 24. மதுரைக் 145 - 6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 228. பெரும்பாண். 380 - 82, குறிப்புரையைப் பார்க்க. 229. மதுரைக். 189. 231. " பருந்துயிர்த், திடைமதிற் சேக்கும் புரிசை " (புறநா. 343 : 15 - 6)பார்வல் : " பார்வற் பாசறை " (பதிற். 84 : 5) ; " பார்வலிருக்கை " (புறநா. 3 : 19) 232. " தழங்குரன் முரசங் காலை யியம்ப " (ஐங். 448 : 1) ; " நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பில் " (புறநா. 161 : 29) ; " காலை முரசக் கனைகுர லோதையும் " , " காலை முரசங் கனைகுர லியம்ப", காலை முரசங் கனைகுர லியம்பும் ", " காலை முரசங் கடைமுகத் தெழுதலும்" (சிலப் . 13 : 140, 14:14, 17: 6, 26 : 53) ; " காலை முரச மதிலியம்ப ", " கடிமுரசங் காலைச் செய " (பு. வெ. 117, 202) 233. வேண்டுபுலத்திறுத்த : " யாண்டுதலைப் பெயர மேண்டுபுலத்திறுத்து" (பதிற். 15 : 1) 234. பல்வேன் மன்னர் : " பல்வேற் கட்டி " (குறுந். 11 : 6) ; " பல்வேற் பூழியர் கோவே ", " பல்வே லிரும்பொறை" (பதிற். 84 : 5 - 6, 89 : 9)
|