| முட்டாள சுடர்த்தாமரை | 250 | கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ்நீல மெல்லிலை யரியாம்பலொடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக் கம்புட் சேவ லின்றுயி லிரிய | 255 | வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டுக் கரும்பி னெந்திரங் கட்பி னோதை யள்ளற் றங்கிய பகடுறு விழுமங் | 260 | கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே யொலிந்த பகன்றை விளைந்த கழனி வன்கை வினைஞ ரரிபறை யின்குரற் |
249. சிறுபாண். 183 - ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 248 - 9. " அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை " (பரி. 13 : 50) 249 - 53. முருகு. 73 - 6. 255 - 6. " இனமீன் முகந்து, துணைபுண ருவகையர் பரத மாக்கள் .................. கொள்ளை சாற்றி " (அகநா. 30 : 2 -10) 255 - 7. நூழில், கொன்று குவித்தலென்னும் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். புறத். சூ. 17, ந. 259 - 60. " அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப, நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச், சாகாட் டாளர் கம்பலை " (பதிற். 27 : 12 - 4), " ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கு, முரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன் ", "அச்சொடு தாக்கிய பாருற் றியங்கிய, பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய, வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும், பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ" (புறநா. 60:8-9, 90:6-9), " மடுத்தவா யெல்லாம் பகடன்னான்" (குறள், 624), "நிரம்பாத நீரியாற் றிடுமணலு ளாழ்ந்து, பெரும்பார வாடவர்போல் ................... புல்லுண்ணா பொன்றும்" (சீவக. 2784), "குண்டுதுறை யிடுமணற் கோடுற வழுத்திய, பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல" (பெருங். 1. 53:53-4) என்பவற்றால், எருதுகள் விழுமமுறுதலும், அதனை ஏற்றுக்கொண்டே வருந்தி யுழைத்தலும் அறியலாகும். 262. அரிபறை : "அரிச்சிறு பறையும்" (பெருங். 1. 37:90)
|