307
றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கலிகொள் சும்மை யொலிகொ ளாயந்
265 ததைந்த கோதை தாரொடு பொலியப்
புணந்துட னாடு மிசையே யனைத்து
மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகுநரல மனைமரத்தான்
மீன்சீவும் பாண்சேரியொடு
270மருதஞ் சான்ற தண்பணை சுற்றி யொருசார்ச்
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகி னிருங்குரல் புலர
வாழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர
வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
275பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி
மடக்கட் பிணையொடு மறுகுவன வுகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
280வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்

263 - 4. கலி, செருக்கினை யுணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந.) ; சும்மை அரவமாகிய இசைப்பொருண்மையை உணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந ; இ - வி. சூ. 285 - 6) இவ்வடிகள் மேற்கோள்.

267. அகலிருவானத்து : மணி. 19 : 91.

268. மனைமரம் : "மனைமரத் தெல்லுறு மௌவ னாறும்" (குறுந். 19:3-4); "மனைமர மொசிய" (அகநா. 38:13)

271. " தினைகொய்யக் கவ்வைகறுப்ப" புறநா. 20-10.

275. சிறுதலை நௌவி : புறநா. 2 : 21.

275 - 6. முல்லை. 99-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

278. " படுத்துவைத் தன்ன பாறை " (மலைபடு. 15) ; " பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல் " (அகநா. 5 : 13)

279. " நீலத் தன்ன விதைப்புனம் " (மலைபடு. 102)

281. (பி - ம்.) ‘ சுரிமுக ' " சுரிமுகிழ் முசுண்டை " (அகநா. 235 : 9) முசுண்டை : சிறுபாண். 166 ; நெடுநல். 13 ; மலைபடு. 101.