308
மணிமரு ணெய்த லுறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப
285முல்லை சான்ற புறவணிந் தொருசார்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி
யைவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
290பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்
தினைவிளை சாரற் கிளிகடி பூசன்
மணிப்பூ வவரைக் குரூஉத்தளிர் மேயு
மாமா கடியுங் கானவர் பூசல்
சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
295 வீழ்முகக் கேழ லட்ட பூசல்
கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூச லிருங்கே

282. நெய்தற்பூவிற்கு மணி : " மாக்கழி மணிப்பூ " (குறுந். 55 : 1) ; " மணிநிற நெய்தல் " (ஐங். 96 : 2) ; " மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தல்" (பதிற். 30 : 2)

279-84. பலமலர் வீழ்ந்த இடத்திற்கு வெறிக்களம் : " பல்லிதழ் தாஅய், வெறிக்களங் கடுக்கும் வியலறை " (மலைபடு. 149 - 50); " எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பி, னறுவீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறியயர் களத்தினிற் றோன்றுத் துறைவன்" (குறுந். 318 : 1 - 3) ; " வெறிக்களங் கடுப்ப வீதியு முற்றமு, நிறைப்போது பரப்பி " (பெருங். 2. 2 : 104 - 5)

285. " முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண். 169)

288. வெண்ணெல் : மலைபடு. 471 ; நற். 7 : 7, 350 : 1 ; அகநா. 40 : 13, 201 : 13, 204 : 10, 211 : 6, 236 : 4, 340 : 14, புறநா. 348 : 1, 399 : 1.

289. இஞ்சி மஞ்சள் : " மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் " (பெருங். 3. 17 : 142) ; " வளரும் வாழையு மிஞ்சியு மஞ்சளு மிடை விடாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் " (திருப்புகழ்)

294 - 5. பெரும்பாண். 108 -10-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

296 - 7 வேங்கைப்பூக்கொய்யும் பூசல் : " தலைநாட் பூத்த