| ழேறடு வயப்புலிப் பூசலொ டனைத்து மிலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக் | 300 | கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந் தருங்கடி மாமலை தழீஇ யொருசா ரிருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப நிழத்த யானை மேய்புலம் படரக் கலித்த வியவ ரியந்தொட் டன்ன | 305 | கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந் தருவி யான்ற வணியின் மாமலை வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக் கமஞ்சூழ் கோடை விடரக முகந்து காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை | 310 | யிலவேய் குரம்பை யுழையதட் பள்ளி யுவலைக் கண்ணி வன்சொ லிளைஞர் சிலையுடைக் கையர் கவலை காப்ப |
பொன்னிணர் வேங்கை, மலைமா ரிடுஉ மேமப் பூசல் " (மலைபடு. 305 - 6) ; " மன்ற வேங்கை மலர்பத நோக்கி, ஏறா திட்ட வேமப் பூசல் " (குறுந். 241 : 4 - 5) ; " ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப், புலிபுலி யென்னும் பூச றோன்ற ", " கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய மகளி, ரின்னா விசைய பூசல் பயிற்றலின் " (அகநா. 48 : 6 - 7, 52 : 2 - 4) 299. " அருவிமாமலை " (பொருந. 235) ; மதுரைக். 42, 57-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 300. தொல். அகத். சூ. 5, ந. மேற். 302. எரிநைப்ப : " கோடெரி நைப்பவும்" (பொருந. 234) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 303. நிழத்தலென்பது நுணுக்கமாகிய குறிப்பை யுணர்த்துமென்றற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 34, சே ; 32, ந ; இ - வி. சூ. 281. 310. இலைவேய் குரம்பை : பெரும்பாண். 88 ; " கொன்னிலைக் குரம்பையின்" (குறுந். 284 : 7) உழையதட்பள்ளி : பெரும்பாண். 89-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "அதளுண் டாயினும் பாயுண் டாயினும், யாதுண்டா யினுங் கொடுமின் " (புறநா. 317 : 3 - 4) 311. உவலைக்கண்ணி : பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|