| நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப் பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார் | 315 | முழங்குகட றந்த விளங்குகதிர் முத்த மரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை பரதர் தந்த பல்வேறு கூல மிருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப் பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் | 320 | கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல் விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும் வைக றோறும் வழிவழிச் சிறப்ப | 325 | நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங் கைம்பாற் றிணையுங் கவினி யமைவர முழவிமிழு மகலாங்கண் |
313 " நிழலான் றவிந்த நீரி லாரிடை " (குறுந். 356 : 1) ; " நிழறேய்ந் துலறிய மரத்த ...................காடு ", "நிழலறு நனந்தலை " " மரநிழ லற்ற வியவிற் சுரன்", " நிழன்மா யியவு " (அகநா.1 : 11 - 9, 103 : 1, 353 : 15, 395 : 7) ; " நிழலு மடியகத் தொளிக்கு மாரழற்கானத்து" (பதினோராந். திருவாரூர். மும். 3) ; " முருகு நாறு பொன் னிதழியார் முண்டகப் பதத்தி, னொருவு மாருயிர் பருவத்தின் மீளவுற் றிடல்போற், பருதி வானவ னுச்சமாம் பதத்துமென் மலர்ப்பூந், தருவி னீங்கிய நிழலெலாந் தருவடி யடைந்த" (காஞ்சிப். பன்னிரு. 340) 314. " பாலை நின்ற பாலை நெடுவழி " (சிறுபாண். 11) பாலைத்திணைக்கும் நிலமுண்டென்பதற்கு இவ்வடி மேற்கோள் : நம்பி . சூ. 6, உரை ; இ - வி. சூ. 382. 316. " கோடீ ரிலங்குவளை" (குறுந்.11 : 1, 31 : 5, 365 : 1) ; " அரம்போ ழவ்வளை ", " கடற்கோ டறுத்த வரம்போ ழவ்வளை ", " கோடீ ரெல்வளை " (ஐங். 185 : 3, 194 : 1, 196 :1 ) ; " அரம் போ ழவ்வளைப் பொலிந்த முன்கை", " வாளரந் துமித்த, வளை", " அரம்போ ழவ்வளை தோணிலை நெகிழ ", "அரம்போ ழவ்வளை செறிந்த முன்கை " (அகநா. 6 : 2, 24 : 12, 125 : 1, 349 : 1) 320. "வராஅற், றுடிக்கட் கொழுங்குறை" (அகநா. 196 : 2 -3) ; கொழுமீன் : (பெரிய, திருக்குறிப்பு, 35 ; திருச்சிற். 188) 324. வழி வழிச் சிறப்ப : மதுரைக். 194. 326. பெருங். 4-2 : 70.
|